Friday, September 18, 2009
Tuesday, September 8, 2009
Saturday, September 5, 2009
கண்களிலிருந்து வடியும் ரத்தம் - தவிக்கும் யு.எஸ். சிறுவன்
அமெரிக்காவைச் சேர்ந்த 15 வயதான கால்வினோ இன்மேன் என்ற சிறுவனின் கண்களிலிருந்து ரத்தம் வழிகிறது. இந்தக் கொடுமையிலிருந்து மீள வழி தெரியாமல் தவித்து வருகிறான் அந்த சிறுவன்.
கடந்த மே மாதம் முதல்தான் இந்த கொடுமையை சந்தித்து வருகிறான் இன்மேன். ஒரு மாலை நேரத்தில் முகம் பார்க்க கண்ணாடி முன் நின்றபோது கண்களிலிருந்து தாரை தாரையாக ரத்தம் வடியவே பீதியடைந்தான் இன்மேன்.
டென்னஸ்ஸி மாநிலம் ராக்வுட் நகரைச் சேர்ந்தவன் இன்மேன். தனது நிலை குறித்து அவன் கூறுகையில், எனக்கே என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. சாகப் போகிறேனோ என்ற பீதி வருகிறது என்றான்.
இன்மேனின் தாயார் டேமி மைனாட் கூறுகையில், கண்களிலிருந்து கண்ணீர் போல ரத்தம் வடியத் தொடங்கவே அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அங்கு போனதும் ரத்தம் வடிவது நின்று விட்டது. நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை முதலில் டாக்டர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பின்னர் வீட்டிற்குத் திரும்பினோம். ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் ரத்தம் கொட்டவே மறுபடியும் மருத்துவமனை சென்றோம். ஆனால் அப்போதும் ரத்தம் நின்று விடவே டாக்டர்களிடம் நாங்கள் விளக்கியும் அவர்களுக்குப் புரியவில்லை.
இப்படி இதுவரை எந்த நோயாளியும் எங்களிடம் வந்ததே இல்லை என்கிறார்கள் டாக்டர்கள்.
இருப்பினும் எனது மகனுக்கு எம்.ஆர்.ஐ, சிடி மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஆனால் அதில் எல்லாமே நார்மல் என்றுதான் வருகிறது.
இப்போது எனது கவலையெல்லாம் எனது மகனின் துயரத்தை எப்படித் தீர்க்கப் போகிறேன் என்பதுதான் என்கிறார் வேதனையுடன்.
டென்னஸ்ஸி ஹேமில்டன் கண் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர் பாரட் ஹெய்க் கூறுகையில், இந்தப் பிரச்சினைக்கு ஹீமோலேக்ரியா (haemolacria) என்று பெயர்.
அதீத மனத் துயரம், சோர்வு, தலைக் காயம் ஆகியவற்றை சந்திக்கும் நபர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் வருவது சாதாரணமானதுதான்.
ஆனால் இன்மேன் விவகாரத்தைப் பொறுத்தவரை இப்படி எதையும் அந்த சிறுவன் சந்திக்கவில்லை. அப்படி இருந்தும் கண்களிலிருந்து ரத்தம் கொட்டுவது புதிராக உள்ளது. மேலும் இந்த சிறிய வயதில் இப்படி ஒரு பிரச்சினை இன்மேனுக்கு வந்திருப்பது கவலைக்குரியதாக உள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு முதல் இப்படி இதுவரை 4 கேஸ்கள் மட்டுமே உலக அளவில் ரிப்போர்ட் ஆகியுள்ளதாம்.
இது மிக மிக அரிய பிரச்சினை என்பதால் இன்மேன் பல்வேறு வகையான சோதனைகளுக்கு உட்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ரத்தம் தொடர்பான சிறப்பு நிபுணர்கள், கண், காது, மூக்குத், தொண்டை நிபுணர்கள் என பலரிடமும் அவன் ஆலோசனை பெற வேண்டும் என்பது அவர்களது கருத்து.
தற்போது ஹேமில்டன் கண் மருத்துவக் கழகத்தின் நிபுணரான டாக்டர் ஜேம்ஸ் பிளமிங், இன்மேனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

Subscribe to:
Posts (Atom)