Thursday, February 26, 2009

"எங்கள் தமிழர்கள் வாழும் பகுதியில் குண்டுவீச்சைத் தொடர்ந்தால் சிங்களர்களின் தலைநகரமான கொழும்பு மீது நாங்கள் குண்டு வீசுவோம்'' என்று எச்சரிக்கும் புலி

இலங்கையின் கட்டுநாயக விமானப்படைத்தளமும் அதனையொட்டியுள்ள வான் படை தலைமையகமும் சிங்கள அரசின் அதி உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறது. இதற்குள் ஊடுருவி மீண்டும் ஒருமுறை புலிகள் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்... இலங்கை அரசுக்கு கிலிபிடிக்க வைத்துவிட்டது. புலிகளின் இந்த தாக்குதலை இலங்கை அரசு முறியடித்துவிட்டாலும், ""இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது'' என்று சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன.வன்னியில் உள்ள தமிழர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும் சிங்கள அரசுக்கு, ""எங்கள் தமிழர்கள் வாழும் பகுதியில் குண்டுவீச்சைத் தொடர்ந்தால் சிங்களர்களின் தலைநகரமான கொழும்பு மீது நாங்கள் குண்டு வீசுவோம்'' என்ற எச்சரிக்கும் விதத்தில் புலிகள் நடத்திய தாக்குதலாகத்தான் இதைப் பார்க்கிறோம் என்கி றார்கள் இன்னமும் பீதி விலகாத கொழும்புவாசிகள்.இலங்கையின் பாதுகாப்புத் துறை பேச்சாளரும் அமைச்சருமான கெகலியேரம்புக்வெல, ""புலிகள் நடத்திய வான் தற்கொலைத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் விமானப்படைத் தளத்தை முற்றிலும் அரசு இழந்திருக் கும்!'' என்கிறார் மிரட்சியுடன். இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள புலிகள் தலைமை, ''வான்படைத் தலைமையகமும் கட்டுநாயக வான்படைத் தளமும் தமிழ்மக்கள் மீதான வான் வழி தாக்குதல்களில் முக்கிய பங்கு வகிப்பவை. அதனால் அதனை இலக்கு வைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தினோம்'' என்கிறது.கடந்த 21-ந் தேதி இரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பிரபாகரனிடம் நீலப்புலிகள் விருது பெற்ற வான்கரும்புலிகளின் (தற்கொலைப்படை) முக்கிய தளபதிகளில் ஒருவரான ரூபன் மற்றும் சிரித்திரன் பங்கேற்றனர். ""தற்போது நடத்தப்பட்ட தாக்குதலோடு இதுவரை 9 முறை விமானத்தாக்குதலை நடத்தியுள்ளனர் புலிகள். இதற்குமுன்பு நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லாமே, இலக்கை குறிவைத்து குண்டுகளை வீசிவிட்டு பத்திரமாக திரும்பிவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் வியூகங்கள் வகுத்தனர் புலிகள். ஆனால் முதல் முறையாக வான்வழி தற்கொலைத்தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக் கின்றனர். அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது போன்ற ஒரு தற்கொலை வான்படைத்தாக்குதல் நடத்தப்பட்டால்தான் நோக்கம் நிறைவேறும் என புலிகள் கருதியிருக்கக் கூடும்''என்கிறார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்."புலிகளின் பரப்பளவை சுருக்கிவிட் டோம், அவர்களின் 7 விமான ஓடுதளங் களையும் கைப்பற்றி அழித்துவிட்டோம். புலிகளால் இனி செயல்படமுடியாது. விமான தாக்குதலையும் நடத்தமுடியாது. ஓரிரு நாட்களில் புலிகளை முற்றிலும் அழித்து விடுவோம். சரணடைவதை தவிர வேறு வழிகள் அவர்களுக்கு இல்லை' என்றெல்லாம் சிங்கள ராணுவம் இறுமாந்திருக்கும் நிலையில்தான் திடீரென பிரதான வான் வழியிலேயே தங்களின் 2 விமானங்களை சீறிப்பாய வைத்து தாக்குதலை நடத்தி இலங்கை அரசை கதிகலங்க வைத்துள்ளனர் புலிகள்.இந்த தாக்குதல் எப்படி நடந்துள்ளது என்று வன்னி பிரதேசத்தில் விசாரித்தபோது, ""வன்னிப் பகுதியில் புதுக்குடியிருப்பு மற்றும் அதனையொட்டிய கடற்பரப்புமாக சேர்ந்து 100 சதுரகிலோ மீட்டர் பரப்பளவிலேயே புலிகள் உள்ளனர். இந்த பகுதியை சகல முனைகளிலும் சுற்றி வளைத்து 8 படையணி களை நிற்க வைத்து கடுமையாக தாக்குதலை நடத்திவருகிறது ராணுவம். இது தவிர முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிநவீன 25-க்கும் மேற்பட்ட டோரா கப்பல்களை நிறுத்தி தீவிரமாக கண்காணித்து வரு கின்றனர். அதேபோல முல் லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் எல்லாம் இந்தியா வழங்கிய ராடார்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக் கிறது. இதனையெல் லாம் மீறித்தான் இந்த தாக்குதலை நடத்தி யிருக்கிறார்கள் புலிகள்.புதுக்குடியிருப்பு மற்றும் தங்கள் கட்டுப் பாட்டில் உள்ள கடற் பிரதேசத்தில் 2 ஓடு தளங்களை வைத்திருக் கிறார்கள். கடற்பிரதேச ஓடுதளத்திலிருந்து முல் லைத்தீவு வழியாக கொழும்பு நோக்கி விரைய ஒரு திட்டம் போடப்பட்டிருக்கிறது. ஆனால், முல்லைத்தீவு வான்வழி என்பது திறந்தவெளி பகுதி. இதில் பயணித்தால் கடல் பகுதியில் உள்ள சிங்கள கடற்படை... தங்கள் விமானம் புறப்பட்ட இடத்திலேயே தாக்கி அழித்துவிட சாத்தியங்கள் அதிகம். அதிலும் கொழும்பு நோக்கி செல்ல முல்லைதீவு தேவையும் இல்லை என கருதி புதுக்குடியிருப்பு பகுதி ஓடுதளத்திலிருந்தே விமானங்களை இயக்க முடிவெடுத்துள்ளார் பிரபாகரன். அதன்படி, புதுக்குடியிருப்பிலிருந்து இரவு 8.25க்கு ஒரு விமானமும் 8.40க்கு மற்றொரு விமானமும் புறப்பட்டது. இந்த 2 விமானங்களில் ஒன்றில் கேணல் ரூபனும் மற்றொன்றில் கேணல் சிரித்திரனும் பயணித்தனர். 2 விமானங்களிலும் 230 கிலோ எடைகொண்ட சி 4 ரக வெடிமருந்துகளும் குண்டுகளும் நிரப்பப் பட்டன. இலக்கை அடைந்ததும் விமானங் களை தாழ்வாக இறக்கி விமானத்தை வெடிக்க வைத்து இலங்கை அர சின் வான்படைத்தளத் தையும் வான் படைத் தலைமையகத்தையும் சிதறடிப்பதுதான் திட் டம். இந்த திட்டத்தின் படி இரவு 9.40 க்கு கொழும்புவை அடைந் துள்ளன. புலிகளின் விமானம் பறந்த பாதை என்பது இலங் கை விமானப் படையினர் பயன்படுத்தும் பிரதான வான் வழி பாதையாகும். ஆனால் இந்த பகுதிகளில் இருந்த ரேடார் களின் பார்வையில் படாமல் விரைந்துள்ள புலிகளின் விமானம் கொழும்புக்குள் நுழைந்தபோது தான் அங்கிருந்த ரேடார்களில் சிக்கியுள்ளது. அப்போதுதான் கண்டறிந்துள்ளனர் ராணுவத்தினர். உடனடியாக கொழும்பு முழுவதும் மின்சாரத்தை துண்டித்தனர். ஆகாயத்தில் ஒளிவெள்ளத் தை பாய்ச்சி புலிகளின் விமானத்தை தேடினர். சட்டென்று விமானங்கள் சிக்காததால் உயர்பாதுகாப்பு வளைய பகுதி முழுவதும் நின் றிருந்த ராணுவத்தினர் விமான படைஎதிர்ப்பு பீரங்கி மூலம் ஆகாயத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் விமான படைத் தலைமையகத்தை தாக்குவதற்கு நெருங்கிவிட்ட விமானம் நிலை தடுமாற... அருகில் இருந்த வருமான வரித் துறையின் 13 மாடி கட்டி டத்தில் மோதி விபத்திற்குள்ளாகி விட்டது. இதனால் அந்த கட்டிடம் தீப்பற்றி எரிந்தது. அதேவேளையில் வான்படைத்தளத்தைநெருங்கி விட்ட மற்றொரு விமானத்தை நோக்கி ராணுவத்தினர் சுட... அந்த விமானமும் இலக்கை அடைய முடியவில்லை. மின்சாரத்தை துண்டித்து விட்டு ஆகாயத்தில் சரமாரியாக பீரங்கி தாக்குதலை ராணுவம் நடத்தியதால் புலிகளின் தளபதிகள் தடுமாறிவிட்டனர். தங்களிடமிருந்த வெடிகுண்டுகளை இயக்குவதற்கு முன்பு புலிகள் மீது ராணுவத்தின் குண்டுகள் பாய்ந்ததால் செயல் இழந்து விட்டது புலிகளின் விமானம். ஒரு 5 நிமிடம் ராணு வத்தின் தாக்குதலிலிருந்து புலிகளின் விமானத்தில் ஏதேனும் ஒன்று தப்பித்திருந்தாலும்கூட ராணுவத்திற்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியிருப் பார்கள். பெரிய இழப்புகள் ராணுவத்திற்கு இல்லையென்றா லும் கூட.. புலிகள் தங்களால் எந்தசூழலிலும் பலத்தை நிரூபிக்க முடியும் என்று உணர்த்தியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்''’என்கின்றனர்.இலங்கை ராணுவ வட்டாரங்களில் விசாரித்த போது,’""வவுனியா, மன்னார் வழியாக புலிகளின் விமானம் பயணிக் கிறபோதே எங்களுக்கு தகவல் வந்து விட்டது. இந்தியா வழங்கிய ரேடார்கள் இந்த முறை தப்பு செய்யவில்லை. மிக துல்லியமாக எங்களுக்கு காட்டிக்கொடுத்தது. அத்துடன் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது என்பதையும் கணக்கிட்டு சொல்லியது ரேடார்கள். அதனால் கொழும்பில் வைத்து அதனை தகர்க்கவேண்டு மென்று புலிகளின் விமானத்தை இடையில் மறிக்கவில்லை. அதேசமயம், ராணுவத்தின் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் படையணியினரையும் உஷார் படுத்திவிட்டு காத்திருந்தோம். கொழும்பிற்குள் நுழைந்ததுமே மின்சாரத்தை துண்டித்துவிட்டு அதிரடியான தாக்குதலை நடத்தியதில் புலிகளின் விமானங்களை வீழ்த்திவிட்டோம். ரிஸ்க்கான ஆபரேசன்தான். கொஞ்சம் தவறியிருந்தாலும் புலிகள் ஜெயித்திருப்பார்கள். சமாளிக்கவே முடியாத அளவிற்கு ராணுவத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆக புலிகளிடமிருந்த 2 விமானங்களையும் அழித்துவிட்டோம். இனி அவர்கள் வான்வழித் தாக்குதல் நடத்த முடியாது. புலிகளுக்கு மிகப்பெரிய இழப்பு இது''’என்கின்றனர் ராணுவ உயர் அதிகாரிகள்.ஆனால் புலிகள் தரப்போ,’""ஏற்கனவே நாங்கள் பயன்படுத்திய விமானத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தற்போது பயன்படுத்தியது ஒருவர் அமர்ந்து செல்லும் மிக சிறிய ரக விமானம். ஏற்கனவே பயன்படுத்தியது இருவர் மற்றும் நால்வர் அமர்ந்து செல்லும் விமானங்கள். அந்த விமானங்கள் இன்னமும் பத்திரமாகத்தான் இருக்கிறது. அதனால் புலிகளின் வான் வழித்தாக்குதல்கள் தொடரும்''’என்கின்றன வன்னியிலிருந்து வரும் தகவல்கள். புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ள ராணுவத் தினர் அந்த விமானத்திலிருந்து வெடி மருந்துகளை கைப்பற்றியிருப்ப துடன் அந்த விமானங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது? என்ன உலோகத்தால் உருவாக்கியிருக்கின்றனர்? எத்தனை பாகங் களாக பிரிக்க முடிகிறது? எந்த நாட்டிலிருந்து விமான பாகங்களை வரவழைத்துள்ளனர்’’என்று தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்படவில்லை, கைது செய்யப்பட்டுள்ளார்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலை புலிகள் நடத்திய வானூர்தி தாக்குதல் நடவடிக்கைளுடன் தொடர்புள்ளதாக சந்தேகித்தே குற்றப் புலனாய்வு காவல்துறையினர் கொழும்பில் இருந்து வெளியாகும் 'சுடரொளி' மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரான ந.வித்தியாதரனை கைது செய்திருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் உள்ள 'மகிந்த' மலர்ச்சாலையில் நடைபெற்ற அவரது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொண்டிருந்த வித்தியாதரன் மூன்று வெள்ளை வான்களில் சென்ற ஆயுததாரிகளால் பலாத்காரமாக கடத்தப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
தற்போது அவர் கடத்தப்படவில்லை என்றும் விசாரணை செய்வதற்காகவே குற்றப் புலனாய்வு காவல்துறையினர் கல்கிசையில் கைது செய்ததாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவிக்கின்றார்.
ஆனால், மரணச்சடங்கில் கலந்து கொண்ட வித்தியாதரனை ஆயுதம் தரித்த குழுவினர் பலாத்காரமாக இழுத்து வெள்ளை வானில் ஏற்றியதாகவும் அவ்வேளை, வித்தியாதரன் சத்தமிட்டார் என்றும் மரணச்சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களில் பலரும் இதனைத் தடுக்க முயற்சித்த போது ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.ஆயுததாரிகளில் சிலர் சீருடையில் காணப்பட்டனர் என்றும் நேரில் கண்டவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளதாகவே கல்கிசை, வெள்ளவத்தை காவல்நிலையங்களிலும் உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் வித்தியாதரன் கடத்தப்பட்டதாகவே உதயன், சுடரொளி பத்திரிகைகளின் நிறுவனத்தினரால் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. ஊடக அமைப்புக்களும் அவ்வாறுதான் தகவல் கொடுத்திருந்தன.
இன்று வியாழக்கிழமை காலை 9:45 நிமிடத்தில் அவர் கடத்தப்பட்டிருந்தார். சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் கடத்தப்பட்ட வித்தியாதரனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 12:30 நிமிடமளவில் காவல்துறை ஊடக பேச்சாளர் றஞ்சித் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், வித்தியாதரன் கடத்தப்படவில்லை என்றும் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளமையானது ஊடகவியலாளர் மத்தியில் ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக சந்தேகம் இருந்திருக்குமானால் வித்தியாதரனின் வீட்டுக்கு அல்லது அவரது அலுவலகத்திற்கு குற்றப்புலனாய்வு காவல்துறையினர் சென்று விசாரனை நடத்தியிருக்கலாம் அல்லது விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கலாம்.
எதற்காக உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் வெள்ளை வானில் கடத்த வேண்டும் என்று ஊடக அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
வித்தியாதரன் கடத்தப்படவில்லை அவர் கைது செய்யப்பட்டார் என்று தற்போது எதற்காக காவல்துறையினர் கதையை மாற்றுகின்றனர் எனவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
'சுடரொளி' பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாக கடந்த வாரம் வித்தியாதரன் குற்றப் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Monday, February 23, 2009

ஆயுதங்களை கைவிடுமாறு கோருவதற்கு முன்னர், போர் நிறுத்தத்தையும் நிரந்தர தீர்வையும் சர்வதேசம் வலியுறுத்த வேண்டும்: தமிழீழ விடுதலைப்புலிகள்

போர் நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்தி அரசியல் தீர்வு யோசனை ஒன்றுக்கு முன்னுரிமை கொடுத்த பின்னரே ஆயுதங்களை கைவிடும் கோரிக்கையை வலியுறுத்த முடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா நடேசன் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை அவர், இணைத்தலைமை நாடுகளுக்கு முன்வைத்துள்ளார். தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கு சர்வதேச உத்தரவாதம் கிடைக்குமானால் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதம் என்ற விடயத்திற்கு அவசியம் இருக்காது என்றும் நடேசன் நேற்று விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வன்முறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்றும் இணைத்தலைமை நாடுகள் கோரிக்கையை முன்வைத்திருந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நடேசன், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.தமிழ் மக்கள் நாள்தோறும் இனப்படுகொலை பயங்கரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாக நடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் இலங்கை நாட்டின் ஒரு தேசிய இனம், வடக்கு கிழக்கு அவர்களின் தாயகமாகும். இந்தநிலையில் கடந்த 50 வருடங்களாக இலங்கை அரசாங்கம் தமிழ் சமூகத்தை அரச பயங்கரவாதத்தின் மூலம் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து 25 வருடங்கள் சாத்வீக போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும் அது இலங்கை அரசாங்கத்தினால் அடக்கப்பட்டது.
அதேநேரம் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகளும் தமிழர்களின் பிரதேசங்களில் சிங்களவர்களின் குடியேற்றங்களும் நடத்தப்பட்டன. தமிழர்கள் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டார்கள்.
1977 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அவர்களின் வாக்குகள் மூலம் தமது அரசியல் இலக்கான சுதந்திர நாடு மற்றும் வடக்கு கிழக்கு தாயகம் என்பவற்றை உலகத்திற்கு அறிவித்தனர்.
இந்தநிலையில் தமிழ் மக்களின் தீர்ப்பை தமது தேசிய கடமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றதாக நடேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் பாரிய அர்ப்பணிப்புகளை செய்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் முன்னிலையில் உள்ளபோது இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வருவதும் பின்னர் அந்த பேச்சுவார்த்தை காலத்தில் தமது இராணுவத்தை பலப்படுத்திக்கொண்டு பேச்சுவார்த்தையை முறித்து போருக்கு செல்கின்ற நடைமுறையை மேற்கொண்டு வந்துள்ளதாக நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார். இது 1985 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கம் எப்போதுமே இராணுவத் தீர்வில் நாட்டம் கொண்டிருந்ததே தவிர அரசியல் தீர்வில் நாட்டம் கொள்ளவில்லை
இந்தநிலையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதம் என கூறி, பாதுகாப்பு காரணங்களுக்காக எனத் தெரிவித்து மனிதாபிமான பணியாளர்களையும் ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் நாட்டில் இருந்து வெளியேற்றியது. அத்துடன் சிங்கள படையினரால் தமிழர்களின் உரிமைகள் மீறப்பட்டமையை சுட்டிக்காட்டியவர்கள், பயங்கரவாதிகள் அல்லது வெள்ளைப்புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டனர்
ஹிட்லர் அரசாங்கத்தில் இருந்து ருவன்டா மற்றும் சூடான் அரசாங்கம் வரை இனப்படுகொலைகளை மேற்கொண்டன. அதேபோல தான் இலங்கை அரசாங்கமும் 1956 ஆம் ஆண்டு முதல் தமிழர்களுக்கு எதிரான படுகொலையை ஆரம்பித்து இன்று வரை சுமார் இரண்டு இலட்சம் பேரை படுகொலை செய்துள்ளது.சர்வதேசம், தமிழர்களின் அரசியல் குறிக்கோளுக்கு ஆதரவளிப்பதற்கு தயங்குகின்ற போதிலும், தமிழர்களின் அரசியல் குறிக்கோள்களுக்கு எதிராக செயற்படுவதுடன் சிங்கள அரசாங்கம் படைகளும் தமிழர்களை கொலை செய்து வருவதாக நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னியில் இலங்கைப்படையினர் எறிகணைகளையும், பல்குழல் பீரங்கிகளையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்துகின்றனர். இதன் காரணமாக பெண்கள் சிறுவர்கள் உட்பட்ட பலர் காயமடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 வரையிலான மக்கள் இவ்வாறான தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்இந்தநிலையில், ஏற்கனவே இரண்டாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் ஐயாயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர். இது 21 ஆம் நூற்றாண்டில் தமிழீழமும் தமிழர்களும் சந்தித்த பாரிய இனப்படுகொலையாகும் என நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என எதிர்பார்க்கின்ற வேளையில் தமிழ் மக்கள் பாரிய இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்படுகின்றன. எனவே, சர்வதேசம் , தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்த முன்வரவேண்டும். அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கைவிடுமாறு கோருவதை விடுத்து. இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்த வேண்டும் என நடேசன் கோரியுள்ளார்.அத்துடன் சர்வதேச சமூகம், தமது அதிகாரங்களை பயன்படுத்தி, போர் நிறுத்தம் ஒன்றை கொண்டு வந்து வன்னியில் உள்ள தமிழர்களை பாதுகாப்பதுடன் அவர்களுக்கான உணவு மற்றும் மருத்துவ உதவிகளையும் நிவர்த்திக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்இந்தநிலையில் போரை நிறுத்தி அரசியல் தீர்வு ஒன்றுக்காக தாம் பேச்சு நடத்தவும், ஒத்துழைப்பு வழங்கவும் தயார் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

மக்களை வெளியேற்ற அமெரிக்கா தலைமையில் மீட்பு நடவடிக்கை: இணைத்தலைமை நாடுகளும் உதவி

வன்னியில் சிக்குண்டிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளின் உதவியுடன், அமெரிக்காவின் தலைமையின் கீழ் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஆசிய பிராந்திய கட்டளைத்தலைமையகமான ஹவாயிலிருந்து அமெரிக்க இராணுவ உயர்மட்டக் குழுவொன்று இலங்கை வந்திருப்பதாகவும், வன்னி மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து இவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படையினர் உட்பட வன்னி மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க இராணுவ உதவிகள் வழங்கப்படவிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வன்னியிலுள்ள மக்களை கடல்மார்க்கமாக வெளியேற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டு மனிதநேயப் படையணி மக்களை வெளியேற்றவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவும் அந்த ஊடகத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், எப்பொழுது இந்த மனிதநேய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பது பற்றித் தனக்குத் தெரியாதென அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கையில் இணைத்தலைமை நாடுகளைத் தனிப்பட்ட ரீதியில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் பேச்சுக்களை நடத்திவருவதாகவும், மக்களை வெளியேற்றுவதற்கு ஏனைய நட்புநாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் போகல்லாகம அந்த ஊடகத்திடம் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கைகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகளைப் பாதிக்காதவைகயில் அவர்களின் கொடியுடன் முன்னெடுக்கப்படும் என அந்த ஊடகத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்னியிலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கான உதவிகளை வழங்கத் தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சரும், பிரதமர் பதவியைத் தற்காலிகமாக வகித்து வருபவருமான பிரணாப் முஹர்ஜி சில தினங்களுக்கு முன்னர் இந்திய லோக்சபாவில் கூறியிருந்தார். இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டிருந்தது. வெளிநாடுகளின் மனிதநேய நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருந்தபோதும் எப்பொழுது மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவரவில்லையென அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Saturday, February 21, 2009

ஜெனீவாப் பேரணி

ஜெனீவாப் பேரணி


Tuesday, February 17, 2009

"ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...
அமெரிக்காவின் முப்படைகளும் அக் காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும்முடியவில்லை...வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. கனடா....பிரான்ஸ்இன்னும் பல..... ஒண்ணும் புடுங்க முடியவில்லை.... புலியின் அட்டகாசமும் குறையவில்லை
கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடுஒன்றும் நடத்தப்பட்டது
அதிலே அவமானம், எந்த‌ நாட்டாலும் முடியவில்லை என பேசப்பட்ட போது....
எங்களைக் கேட்கலயே....... ஒரு குரல்...........
பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....
நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ...இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...சரி, அனுமதி அளிக்கப்பட்டது....இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்குள் போய்...நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..போன இலங்கைப்படை திரும்பவேயில்லை...
கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...இலங்கைப் படைகளை மீட்க அக் காட்டுக்குள் சென்றன..
அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டுபடைகள் அத் திசை நோக்கி விரைந்தன...
அங்கே அவை கண்ட காட்சி.............ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்ததுகீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறுகூறிக்கொண்டிருந்தனர்"ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்?
அதற்கு பன்றி
"பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்கை தமிழங்களுக்கு 25வருடமா இதைத்தான்பண்றாங்க" என்றது சிரித்தவாறு..............

Monday, February 9, 2009

என் அப்பு கட்டிய கோவணமே எனக்கு தேசியக்கொடி.!

உனக்கு வேண்டுமானால் பிரான்ஸ் கொடியோ அவுஸ்ரேலியக்கொடியோ தேசியக்கொடியாகலாம்
எனக்கு என் அப்பு கட்டிய கொவணத்துணியே தேசியக்கொடி

ஒடியல் புட்டும் மீன்கறியும் தான் எனக்கு எப்பொதும் தேசிய உணவு.
பிசாவும் மக்கசும் ருசிதான் -ஆனாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில் ஆக்கிய நண்டுக்குழம்புக்கு கீழ்தான்

கொள்ளை அழகுதான் பாரிஸ் கோபுரம்-ஆனாலும்
நெடிதுயர்ந்த பனையை விட கொஞ்சம் குறைவுதான்.!

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாதுகடல் கடந்தாலும் கலாச்சாரம் மாறாது

நாகரிகம் என்று உன் நல்ல பெயரை நறுக்கி மாற்றலாம்
உன்னுள் ஒடும் உன் தாயின் குருதியை மாற்றலாமோ?

ராப்பும்(துள்ளிசை) பப்பும்(கேளிக்கை விடுதி) உனக்கு அந்த மாதிரி
உடுக்கோசையும் காவடிஆட்டமும்தான் என்றும் எனக்கு முன்மாதிரி
அடையாளங்களை தொலைத்து விட்டு அசிங்கமாய் வாழ்வதைவிடஅம்மணமாக வாழ்வது மேல்.!

Sunday, February 8, 2009

வன்னியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அரசாங்கம் உத்தரவு

வன்னியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர்கள் உடனடியாக குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டுமென கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி டொணால்ட் பெரேரா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை 96 கிலோ மீற்றர் பரப்பிற்குள் மட்டுப்படுத்தியுள்ளதாகவும், குறித்த பிரதேசத்தில் இயங்கும் செஞ்சிலுவைச் சங்க ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க முடியாதெனவும் அவர் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் கடமையாற்றும் மூன்று அதிகாரிகள் விடுதலைப் புலிகளுக்கு தேவையான வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகள் வலிந்த தாக்குதல்: சூப்பர் டோரா மூழ்கடிப்பு: 15 கடற்படையினர் பலி

முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி நடத்திய வலிந்த தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் சூப்பர் டோரா மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு சூப்பர் டோரா கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 நிமிடம் தொடக்கம் 6:00 மணி வரை சிறிலங்கா கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில், கடற்படையினரின் சுப்பர் டோரா கடற்கரும்புலிகளின் தாக்குதலில் முற்றாக மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த 15 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படையினரின் மற்றொரு சூப்பர் டோரா கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இம்மோதலில் கடற்புலிகள் நால்வரும் கடற்கரும்புலிகள் இருவரும் வீரச்சாவடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் சிறிலங்கா நடத்திய களியாட்ட விருந்து முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் சிறிலங்கா தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர நாள் களியாட்ட விருந்து முன்றலில் அமெரிக்கத் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டு மற்றும் இந்திய இராஜதந்திரிகளின் கவனத்தை ஈர்ப்பதே தமது நோக்கம் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரகம், தனது நாட்டின் 61 ஆவது சுதந்திர நாளினை முன்னிட்டு களியாட்ட விருந்தினை ஏற்பாடு செய்திருந்தது.
தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஏராளமான வெளிநாட்டுத் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த விருந்து நடைபெற்ற ஒரு பல்கலைக்கழகத்தின் வாயிலில் நூற்றுக்கணக்கான அமெரிக்கத் தமிழர்கள் கூடி பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
விருந்திற்கு வருகை தந்த எல்லோருமே ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கடந்தே சென்றனர்.
"சிறிலங்காவுக்கு எதிராக நாம் போராடுகின்றோம்: அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய தேவை எதுவும் எமக்கு இல்லை. ஆனால், அந்த விருந்திற்கு வருகை தந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கவனத்தை ஈர்ப்பதும், எவ்வாறான ஒரு இனப்படுகொலை செய்யும் நாட்டுடன் அவர்கள் சகவாசம் வைத்துள்ளார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதுமே எமது நோக்கம்" என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளளர்களில் ஒருவர் "புதினம்" செய்தியாளிடம் தெரிவித்தார். "இந்த அர்ப்பாட்டத்தில் நாம் யாரையாவது கண்டித்திருந்தால், அது அங்கு வந்த இந்திய அதிகாரிகளைத்தான். ஏனெனில், இந்தியா தான் தமிழினப் படுகொலைக்குத் துணை போகின்றது" எனவும் அவர் தெரிவித்தார்.

Saturday, February 7, 2009

ஐநா கொடியுடன் இந்தியப்படைகள் வன்னிக்குள் நுளையத்தயார்...

வன்னியில் மிகச்சிறிய பிரதேசமொன்றுக்குள் கடும் மோதல்களுக்குள் சிக்கியுள்ள பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும், இந்தியாவும் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதைடுத்து இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஐ.நா. வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கை நிலவரம் தொடர்பாக நேற்றையதினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா'க்குத் தகவல் தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், மோதல்களுக்குள் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
"மிகவும் சிறிய அதேநேரம் அதிகளவு செறிவான பொதுமக்கள் நிறைந்துள்ள பகுதிக்குள் நடைபெற்றுவரும் மோதல்கள் காரணமாக ஏற்படக்கூடிய மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகம் உடனடியாகச் செயற்படவேண்டும். மோசமான மனிதப் பேரவலத்தைத் தவிர்ப்பதற்கு மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். எந்தவித தாமதமும் இன்றி உடனடியாகச் செயற்படுமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களை ஐ.நா.வும், ஏனைய தரப்புக்களும் வேண்டுகோள் விடுக்கின்றன" என்றார் பான் கீ மூன்.
முரண்பாட்டுக்கான தீர்வு அதற்கான மூல காரணத்துக்கும், சட்டபூர்வமான அபிலாசகைளுக்கும் முகம்கொடுக்கும் அரசியல் அடிப்படையிலேயே காணப்பட முடியும் என்று தான் நம்புவதாகவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிலவரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜியுடன் விரிவாகக் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்ட பான் கீ மூன், இந்த விடயத்தில் ஐ.நா. வின் நிலைப்பாடு இந்திய நிலைப்பாட்டை ஒத்ததாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு இந்தியாவும், ஐ.நா.வும் கூட்டாகப் பணியாற்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மோதல்களுக்குள் சிக்கியுள்ள பொதுமக்களைக் காப்பாற்ற உடனடியாகப் போர்நிறுத்தம் ஒன்று செய்துகொள்ளப்படவேண்டும் என்று பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், தென்னாபிரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு அரசியல் ரீதியாகப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சிக்கவேண்டும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகளின் கூட்டமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலைப்பாட்டைத் தாமும் ஏற்றுக்கொள்வதாக நோர்வே அமைச்சரும், இலங்கை சமாதான முயற்சிகளில் முன்னின்று உழைத்தவருமான எரிக் சொல்ஹேய்மும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி! பெருமளவு படையப் பொருட்கள் மீட்பு! --ஆயுத கிடங்கினை புலிகள் கைப்பற்றினர்

புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மற்றும் மன்னங்கண்டல் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினரரின் ஊடறுப்பு அதிரடித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெருமளவான படையப் பொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்:
கடந்த பெப்ரவரி 1ம் நாள் புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கேப்பாபுலவு மற்றும் மன்னாங்கண்டல் பகுதில் பெருமளவு படையினரும், பெருந்தொகையான படையப்பொருட்களுகம் குவிக்கப்பட்டிருந்தன.

முதலாம் நாள் தொடக்கும் 3ம் நாள் வரை இடம்பெற்ற புலிகளின் ஊடறுப்பு தாக்குதல்கள் மற்றும் கரும்புலி வீரர்களின் தாக்குதல்களில் 1000க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். பெருந்தொகையில் படையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - பல 120 மில்லி மீற்றர் மோட்டார்கள் - பல120 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் - 200081 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் - 8000ஏ.கே துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பலஆர்.பி.ஜி உந்துகணைகள் - பலஆர்.பி.ஜி புரொப்ளர்கள் - பலஎல்.எம்.ஜி துப்பாக்கிகள் - பலஎன இன்னும் பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை செவ்வாய்கிழமை கேப்பாப்புலவு பகுதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டதாகவும் புதன்கிழமை வெளிவந்த ஈழநாதம் பத்திரிகை தெரிவித்திருந்தது. அதில் கரும்புலி தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளின் தேசியத் தலைவருடனான படங்களும் பிரசுரமாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.இதேநேரம் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் படையினருக்கான வழங்கல்களை மேற்கொண்ட 20 வாகனங்களை தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

Sunday, February 1, 2009

‘எங்கட அம்மாவோட அப்பாவோட ,தலைமுறையின்ட ஆசை, இனத் தின்ட ஆசை எங்கட ஆசை நிறைவேறும்

எங்கட அம்மாவோட ஆசை, எங்கட அப்பாவோட ஆசை, எங்கட தலைமுறையின்ட ஆசை, எங்கட இனத் தின்ட ஆசை, விடியப்போகின்ற விடியலின்ட வெளிச்சத்தில எங்கட ஆசை நிறைவேறும், தமிழீழம் நிச்சயம் உதயமாகும்!’
- கிளைடர் குண்டுத் தாக்குதலின் கோரத்தில் உடம்பெங்கும் ரத்த சகதியாக ரணகளப்பட்டிருந்த நிலையிலும், வலி மறந்து முணுமுணுக்கிறான் அந்தச் சிறுவன்.
பிப்ரவரி 4-க்குள் முல்லைத் தீவு முழுவதையும் பிடித்தே தீருவோம் என்கிற வெறியில் வேகமெடுக்கும் இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாவதென்னவோ அப்பாவித் தமிழ் மக்கள்தான்!
பிளேடால் பிரசவம்…
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்கள்தான்
வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவை. வட பகுதியின் நாலரை லட்சம் தமிழர்களும் இந்த நான்கு மாவட்டங்களில்தான் வசித்துவந்தனர்.
இதில் ஒவ்வொரு பகுதியாக ராணுவம் கைப்பற்றக் கைப் பற்ற… மக்களும் புலிகளுடன் நகர்ந்து இறுதியாகத்தான் முல்லைத்தீவு என்ற குறுகிய பகுதிக்குள் அடைபட்டிருக்கின்றனர்.
அதிலும் புதுக்குடியிருப்பு, விசுவமடு, தர்மபுரம், ருத்ரபுரம், உடையார்கட்டு போன்ற சில கிராமங்களுக்குள்தான் இந்த நாலரை லட்சம் தமிழர்களும் சொந்த நாட்டுக்குள்ளேயே நாடு கடத்தப்பட்ட அகதிகளாக அலைந்துகொண்டு இருக்கின்றனர்.
இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதம கொறடாவும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனிடம் பேசினோம்.
”புலிகளைக் குறிவெச்சு எங்க மக்கள் மேல குண்டுகளைப் போடுது ராணுவம். முகமாலை பகுதியைச் சேர்ந்த ஒரு நிறை மாத கர்ப்பிணிப் பெண், தன் குடும்பத்தோட இப்படிக் காட்டில் ஒதுங்கியிருந்திருக்கு. காட்டுக்குள் அந்தப் பெண்ணுக்கு திடீர்னு பிரசவ வலி வரவும், என்ன செய்யறதுன்னு திகைச்சுப் போயிருக்காங்க. அந்த நேரம் பார்த்து ராணுவம் விமானத்திலிருந்து குண்டு போட்டுக்கிட்டிருக்கவும், அவங்களால வைத்தியசாலைக்கும் வர முடியலை.
வேதனையில் துடிச்ச அந்தப் பெண் கொஞ்ச நேரத்தில் இறந்துபோயிருக்கு. உடனே, அவங்க வீட்டுல உள்ளவங்க என்ன செய்யறதுன்னு தெரியாமல் பிளேடை வச்சு வயித்தைக் கிழிச்சு குழந்தையை வெளியே எடுத்திருக்காங்க.
அதேமாதிரி தேவிபுரத்துல கூட்டுக்குடும்பமா வாழ்ந்த ஒரு குடும்பத்துல இருந்த பெரியவர்கள், குழந்தைகள்னு 22 பேர் ஒரே நாள்ல ஷெல் வீச்சுல இறந்துட்டாங்க.
நான்கு குழந்தைகள் உள்ள ஒரு குடும்பம் பயத்துல காட்டுக் குள்ள ஒதுங்கியிருந்திருக்காங்க. அங்க குடிக்கத் தண்ணி கிடைக்காமல் காடு முழுவதும் அலைஞ்சிருக்காங்க.
தாகம் தாங்க முடியாமல் ஒரு குட்டையில தேங்கியிருந்த அழுக்குத் தண்ணியைக் குடிச்சிருக்காங்க.
இதுல கடுமையான வயித்துப்போக்கு ஏற்பட்டு, அந்த நாலு குழந்தைகளும் இறந்துபோயிருக்கு. இதையெல்லாம் ஐ.நா. கண்டிச்ச பிறகுதான், சில பகுதிகளுக்கு பாதுகாப்பு மையங்களை ராணுவம் அறிவிச்சுச்சு.
இதெல்லாம் உலகத்தோட கண்ணுக்குத் தெரியலியா?” - ஆவேசமாகக் கேட்டு நிறுத்தினார்.
வாய் பொத்தி, கைகால் கட்டி…
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோக ராஜலிங்கத்திடம் பேசினோம். ”போர்ச் சூழலின் உக்கிரம் ஒரு பக்கம், எங்க மக்கள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் செத்து மடியற பயங்கரம் இன்னொரு பக்கம்.
தினம் தினம் குறைஞ்சது ஆயிரம் பேராவது போரில் அடிபடுறாங்க. அப்படி வர்ற மக்களுக்கு எந்த மருத்துவ உதவியையுமே இங்கே உள்ள மருத்துவ மையங்களில் செய்ய முடியலை.
வலியில் துடிக்கும் மக்களுக்கு முதலில் ‘கேட்டமின்’ மாதிரியான வலி நிவாரணி, மயக்க மருந்துகளைக் கொடுத்துட்டுத்தான் மருத்துவம் பார்க்கணும். ஆனா, அந்த மருந்துகள் சுத்தமா இல்லை. அதனால அடிபட்டு வர்றவங்க கதறல் வெளியே வராம வாயை அழுத்திப் பொத்தி, அவங்க கைகால்களையும் அமுக்கிப் பிடிச்சு, அந்த ரண வலியோடவே மருத்துவம் பார்க்கறாங்க.
திட்டமிட்டு மருந்துப் பொருட்களை அனுப்பாமல், எங்க இனமே அழியட்டும்னு இலங்கை அரசு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கு.
குறிப்பா இனவிருத்தி வயதுடைய தமிழ் இளைஞர்களைக் குறிவெச்சு ராணுவம் சுட்டுக் கொல்லுது. இந்த விஷயங்கள் எல்லாம் உலக சமுதாயத்தின் பார்வைக்குப் போகலை. அப்படி போனால்தான் இலங்கை அரசின் நிஜமான கோரமுகம் எல்லோருக்கும் தெரியும்!” என்றார்.
ராணுவ வசமான முல்லைத்தீவு!
சமீபத்தில் நடந்த கல்மாடுக்குளம் அணைக்கட்டுத் தாக்குதல் சம்பவத்தை திசைதிருப்பும் விதமாகத்தான் சிங்கள ராணுவம் முல்லைத்தீவு பிடிக்கப்பட்டதாகப் பொய்ச் செய்தி பரப்புகிறது என ஈழ ஆர்வலர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஈழத்தின் போர் நிலைமைகளை அறிந்த சிலரோ, ”முல்லைத்தீவு ராணுவத்தின் வசமாகிவிட்டது உண்மைதான்.
ஆனால், ஒரு வாரத்துக்கு முன்னரே ராணுவம் முல்லைத்தீவின் முகப்புப் பகுதியைப் பிடித்துவிட்டது. பிப்ரவரி 4-ம் தேதி இலங்கையின் குடியரசு தினம்.
அன்றைய தினத்தில் முல்லைத்தீவின் வெற்றிக் கொண்டாட்டத்தை அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தது ராணுவம். புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே பகுதியான முல்லைத்தீவையும் கைவசமாக்கிவிட்டதாக அறிவித்தால், சிங்கள மக்களை சந்தோஷப்படுத்த முடியும் என்று நினைத்தது ராணுவம்.
குடியரசு தினத்தன்றுதான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவிருக்கிறது. முல்லைத்தீவு வெற்றி மூலம் மக்களின் அபரிதமான ஆதரவோடு தேர்தலை எதிர்கொள்ள நினைக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. ஆனால், இந்த சூட்சுமத் திட்டங்களை எல்லாம் புலிகளின் அணைக்கட்டு அட்டாக் தவிடுபொடி ஆக்கிவிட்டது.
இதை ராணுவம் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை.
ஆனாலும், மொத்த மாகாணங்களின் மாவட்ட நிர்வகிப்புப் பகுதிகளை ராணுவம் கையகப்படுத்தியது இதுவரை நடக்காதது.
முல்லைத்தீவின் முக்கியப் பகுதியைப் பிடித்ததன் மூலம் முப்பதாண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை நிகழ்த்தி விட்டது ராணுவம்.
இதற்கு பதிலடியாக இன்னும் ஏதாவது தடாலடியான தாக்குதலைப் புலிகள் கையிலெடுப்பார்கள்…” என்கிறார்கள்.
இன்னும் இரு அணைகள்…
முல்லைத் தீவை பிடித்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்த பிறகு, போர் நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இலங்கையில் இருக்கும் நடுநிலையான பத்திரிகையாளர்கள் சிலரிடம் கேட்டோம்.
”அடுத்த கட்டமாக யாருமே நினைத்துப் பார்க்க முடியாத தாக்குதலை நடத்தி, பெரிய அளவிலான நிலைகுலைவை உண்டாக்கு வதுதான் புலிகளின் போர்த் திட்டம். கல்மாடு அணைக்கட்டை உடைத்ததன் மூலம், சிறு ஆயுதங்களைக்கூடப்பயன்படுத்தாமல் மிகப்பெரிய சேதத்தை ராணுவத்துக்கு ஏற்படுத்தி இருக்கிறார்கள் புலிகள்.
கல்மாடுகுளத்தைவிட பெரிய இரு அணைகள் முழுக்க நீர் நிரம்பி இருக்கின்றன. ரிஷிமாடக்குளம் மற்றும் உடையார்கட்டுக்குளம் இரண்டையும் அடுத்தகட்டத் தாக்குதலுக்காகப் புலிகள் பயன்படுத்துவார்கள் என்று ராணுவத் தரப்பு உஷாராகிவிட்டது.
ஆள் சேதத்தை உண்டாக்கா விட்டாலும், ராணுவத்தை ஆறுமாத காலத்துக்கு முன்னேறவிடாமல் தடுப்பதற்காக மேற் கொண்டு அணை உடைப்புகளைப் புலிகள் நடத்தக்கூடும் என்பது ராணுவத்தின் யூகம். ஆனால், அந்த அணைக்கட்டுகளை உடைக்கும் திட்டம் புலிகளுக்குக் கிடையாது. அதற்கு மாறாக இனி சாதுர்ய தாக்குதலில் புலிகள் தீவிரமாவார்கள்.
கிளிநொச்சியை மீட்கும் திட்டத்தில் காடுகளுக்குள்ளும் பதுங்கு குழிகளுக்குள்ளும் தங்கியிருக்கும் புலிகள் படை, சாதுர்யமான தாக்குதலை நடத்தும். பெரிய பெரிய மரங்களின் நடுப்பகுதியைக் குடைந்து அதன் உள்ளே தற்கொலைப் படை வீரர்கள் தங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
ராணுவப் படைகள் குவிந்திருக்கிற இடங்களில் மரங்களிலிருந்து குண்டோடு குதித்துப் பேரழிவை அவர்கள் உண்டாக்கக்கூடும். இரவு நேரங்களில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி ராணுவத்துக்கு நெருக்கடி கொடுக்கிற போர்முறைகளும் இப்போது பின்பற்றப்பட்டு வருகின்றன…” என்று சொல்கிறார்கள் சிலர்.
தற்கொலைப்படைகள் தயார்!
”கொழும்பில் வாழும் தமிழர்களுக்குள் புலிகளின் தற்கொலைப் படையினரும் கலந்திருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பே அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்கப்பட்டு ‘சூழ்நிலைக்குத்தக்கபடி முடிவெடுங்கள்’ என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதன்பிறகு, அவர்களுக்கும் புலிகளுக்கும் எவ்விதமான தொடர்பும் இருக்காது. அவர்கள் எப்போது என்னவிதமான தாக்குதல்கள் நடத்துவார்கள் என்று புலிகளின் தலைமைக்கும் தெரியாது. முன்னாள் அதிபர் பிரேமதாசாவைக் கொலை செய்த பாபு என்பவர், ஆறு வருடங்களாக பிரேமதாசாவின் அபிமானத்தைப் பெற்றிருந் தவர்.
புலிகளுக்கு எதிரான இக்கட்டுகளை பிரேமதாசா ஏற்படுத்தியபோது, மனித வெடிகுண்டாக மாறினார் பாபு. அதேபோல் இப்போது கொழும்பில் வாழ்ந்தபடி உரிய ‘தருணத்துக்காக’க் காத்திருக்கும் தற்கொலைப் படையினர், எந்நேரத்திலும் சிங்கள அரசின் முக்கியப் புள்ளிகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே, ஃபொன்சேகா, கருணா உள்ளிட்டவர்கள் மும்மடங்கு பாதுகாப்பில் வலம்வருகிறார்கள்.
வருகிற 4-ம்தேதி இலங்கை குடியரசு தினத்தை பெரும் கொண்டாட் டமாக நடத்துகிற மூடில் இருப்பது தெரிந்து, அதற்கு முந்தைய தினத்திலேயே பல்முனை தாக்குதல்களை நடத்தி, அவர்களை விதிர்விதிர்க்க வைக்கும் திட்டத்திலும் இருக்கிறார்கள் புலிகள்!” என்கிறார்கள் கொழும்புவாழ் தமிழர்கள்.
கலங்கடிக்கும் கவுன்டர் இன்டலிஜென்ட்!
புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான சமீபத் திய போர் நிலவரங்களைச் சொல்லும் விவரமறிந்த சிலர், ”கோத்தபய ராஜபக்ஷே மீதும், டக்ளஸ் தேவானந்தா மீதும் புலிகள் தாக்குதல் நடத்தியதாக சமீபத்தில் செய்திகள் பரவின.
ஆனால், அத்தகைய செய்திகளைப் பரப்பிவிட்டதே ராணுவத்தின் கவுன்டர் இன்டலிஜென்ட் ஆட்கள்தான்.
இதன்மூலம் சிங்கள மக்கள் தரப்பின் பேரபிமானத்தைப் பெறுவதும், ‘புலிகள் பொய்யான கருத்துகளைப் பரப்பிவிடுகிறார்கள்’ என்கிற தவறான தோற்றத்தை ஏற்படுத்துவதும்தான் இதன் நோக்கம்.
பிரபாகரன் தப்பி ஓடிவிட்டதாக வதந்திகளைக் கிளப்புவதன் மூலம், அவருடைய மூவ்களை அறிய முடியும் என நினைத்தது இலங்கை உளவுத்துறை.
அதற்குத் தக்க பலன் இல்லாதபட்சத்தில் கவுன்டர் இன்டலிஜென்ட் மூலமாக, இல்லாத கலங்கடிப்புகளை ராணுவத் தரப்பு செய்துகொண்டிருக்கிறது.
எங்களுக்குத் தெரிந்த மட்டில், பிரபாகரன் இப்போது போர்க் களங்களிலேயே தென்படுவதாகச் சொல்கிறார்கள்.
புலிகளின் மருத்துவக் குழு கொடுக்கிற போர் நிலவரங்களை வைத்து ‘முன்னேறுவதா, பின்னகர்வதா’ என்பதை பிரபாகரனே வகுத்துக் கொடுக்கிறார்…” என்கிறார்கள்.
தறிகெட்ட வதந்திகள்…
இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்து கொண்டிருக்கும் மோதலை மையமாக வைத்துத் தமிழகத்தில் பல்வேறு விதமான செய்திகள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாகப் பரப்பப்படும் பல்வேறு தகவல்களில் சிலருடைய விருப்பு-வெறுப்புகளும் இடம்பெற ஆரம்பித் திருக்கின்றன.
‘முல்லைத் தீவில் நடந்த கடுமையான மோதலில் பிரபாகரன் இறந்துவிட்டார்…’ என்று ஒருதரப்பு தகவல் பரப்பிக் கொண்டிருக்கும்போதே எதிர் தரப்பிலிருந்து, ‘டக்ளஸ் தேவானந்தா, கோத்தபய ராஜபக்ஷே, மகிந்தா ராஜபக்ஷே ஆகியோரை கொழும்புவில் வைத்து விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினர் கொன்றுவிட்டார்கள்’ என்று தகவல் பரப்புகிறார்கள்.
‘இலங்கையிலிருந்து வரும் செய்திகளில் எதை நம்புவது, எதைப் புறக்கணிப்பது என்று புரியாமல் தமிழக மீடியாக்கள் குழம்பித் தவிக்க வேண்டும் என்ற தற்காலிக தந்திர ஆயுதமாகவே இப்படி உண்மைகளும் வதந்திகளும் கலந்து கலந்து வெளியிடப்படுகின்றன’ என்கிறார்கள் விவரமானவர்கள்.
இது புரியாமல், ஒவ்வொரு எஸ்.எம்.எஸ். செய்திக்கும் தமிழகத்தில் சிலர் வெடிவெடித்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டதும் நடந்தது.
இத்தனைக்கும் நடுவே, ‘ஃபிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய யூனியனில் புலிகள் இயக்கம் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கங்கள் மீதிருந்த தடை நீக்கப்படுகிறது’ என உறுதிபடுத்தப்படாத தகவல்களும் பரபரவென பரவிக்கிடக்கிறது