Monday, February 9, 2009

என் அப்பு கட்டிய கோவணமே எனக்கு தேசியக்கொடி.!

உனக்கு வேண்டுமானால் பிரான்ஸ் கொடியோ அவுஸ்ரேலியக்கொடியோ தேசியக்கொடியாகலாம்
எனக்கு என் அப்பு கட்டிய கொவணத்துணியே தேசியக்கொடி

ஒடியல் புட்டும் மீன்கறியும் தான் எனக்கு எப்பொதும் தேசிய உணவு.
பிசாவும் மக்கசும் ருசிதான் -ஆனாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில் ஆக்கிய நண்டுக்குழம்புக்கு கீழ்தான்

கொள்ளை அழகுதான் பாரிஸ் கோபுரம்-ஆனாலும்
நெடிதுயர்ந்த பனையை விட கொஞ்சம் குறைவுதான்.!

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாதுகடல் கடந்தாலும் கலாச்சாரம் மாறாது

நாகரிகம் என்று உன் நல்ல பெயரை நறுக்கி மாற்றலாம்
உன்னுள் ஒடும் உன் தாயின் குருதியை மாற்றலாமோ?

ராப்பும்(துள்ளிசை) பப்பும்(கேளிக்கை விடுதி) உனக்கு அந்த மாதிரி
உடுக்கோசையும் காவடிஆட்டமும்தான் என்றும் எனக்கு முன்மாதிரி
அடையாளங்களை தொலைத்து விட்டு அசிங்கமாய் வாழ்வதைவிடஅம்மணமாக வாழ்வது மேல்.!

0 comments: