Wednesday, December 30, 2009
இ.தொ.காவிலிருந்து விலகி எதிரணியில் இணைபவர்கள் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம்
இ.தொ.காங்கிரஸில் இருந்து விலகி எதிரணியில் இணைந்து கொண்டவர்களை வரவேற்கின்றோம். ஆனால் இத்தகைய புதிய நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் ஐ.தே. முன்னணிக்குள்ளே எமது கட்சி இன்று வகிக்கும் அந்தஸ்தையும், தென்னிலங்கையிலே தமிழ் மக்கள் மத்தியில் வகிக்கும் தலைமையையும் ஒருபோதும் பாதிக்க முடியாது என ரணிலிடம் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி எமது தலைவர் மனோ கணேசன் எம்பி இன்று (30-12-09) காலை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்பு கொண்டு உறுதிப்பட தெரிவித்துள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்துவிலகி எதிரணியில் இணைந்துகொண்டவர்களை வரவேற்கின்றோம். ஆனால் இத்தகைய புதிய நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் ஐக்கிய தேசிய முன்னணிக்குள்ளே எமது கட்சி இன்று வகிக்கும் அந்தஸ்த்தையும், தென்னிலங்கையிலே தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக மக்கள் முன்னணி வகிக்கும் தலைமை பாத்திரத்தையும் ஒருபோதும் பாதிக்க முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment