Wednesday, October 22, 2008

மாத்திரைகளால் மூளைச் செயற்பாட்டை ஊக்குவிக்கலாம்.

பரிந்துரைக்கப்பட்டும் Ritalin (methylphenidate) போன்ற அதிக துடிப்புள்ள சிறுவர்கள் மத்தியில் கற்றல் திறனை அதிகரிக்க தயாரிக்கப்படும் (a drug designed to treat hyperactive children - to maximise their learning power)மாத்திரை மற்றும் Provigil மாத்திரைகளைப் பாவிப்பதால் மூளையின் செயற்பாடுகள் மற்றும் ஞாபக சக்தி ( focus, concentration or memory) ஊக்கமடைவதாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் நடத்திய கருத்துக்கணிப்பில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.எனினும் இவ்வாறு மாத்திரைகளை நீண்ட காலம் பாவிப்பதன் பின்னால் உள்ள பாதிப்புக்கள் மற்றும் உடல் நலத்துக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் சரியான ஆய்வு ரீதியான முடிவுகள் இன்னும் பெறப்பட வேண்டிய நிலையில் இது ஒரு ஆரம்ப நிலை அவதானிப்பாக மட்டும் இருக்கிறதுஅதுமட்டுமன்றி நீண்டகாலத்துக்கு இவ்வாறான மாத்திரைகளை உட்கொள்ளல் குறிப்பிட்ட மாத்திரைகள் கொண்டுள்ள இரசாயனப் (வேதியல்) பதார்த்தங்களுக்கு மக்களை அடிமைப்படுத்தி விடலாம் என்றும் எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

0 comments: