Wednesday, October 22, 2008

ஏரோ டைனமிக் கார்

ஒரு லிட்டர் பெட்ரோலில் 180 கி.மீ., தூரம் செல்லும் காரை, இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். பெங்களூரு ஆர்.வி.இன்ஜினியரிங் கல்லூரியின் மெக்கானிக்கல் துறை மாணவர்கள், மிகவும் எடை குறைந்த இந்த ஏரோ டைனமிக் காரை வடிவமைத்துள்ளனர். இந்த காரில் இரண்டு குதிரைத் திறன் கொண்ட 97 சி.சி., ஹோண்டா இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் சேசிஸ், அதிக திறன் கொண்ட அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. ஏர் கூல் இன்ஜினுடன் பைபர் கிளாஸ் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 600 கிராம் எடை கொண்டவை. காரின் மொத்த எடை 55 கிலோ. ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய இந்த கார், 10 அடி நீளமும், 2.5 அடி அகலமும் கொண்டது. இந்த காரில் டி.வி.எஸ்., கார்பரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. எளிதில் கையாளப்படும் இலகு பிரேக்குகள் இதன் சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. பெங்களூரு என்.ஐ.சி.இ., காரிடாரில் இந்த கார் இயக்கி சோதிக்கப்பட்ட போது, ஒரு லிட்டருக்கு 180 கி.மீ., மைலேஜ் கிடைத்தது.
இந்த காரின் இன்ஜின் வடிவமைப்பு, வர்த்தக ரீதியிலும் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. காரை வடிவமைத்த குழுவின் தலைவர் நிஷாந்த் சராவ்கத், ஒரு லிட்டருக்கு 500 கி.மீ., ஓடும் காரை வடிவமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு, 5.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

0 comments: