நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலான பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆறுமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வுகளை முடக்கியுள்ளனர். இதில் படையினருக்கு பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை (17.10.08) தொடக்கம் இன்று திங்கட்கிழமை காலை வரை சிறிலங்கா படையினரின் ஆறுமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.
வான்படையின் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகள், கிபீர், மிக்-27 ரக வானூர்திகள், வெடிகணை, ஆட்டிலறி எறிகணை, இலகு மற்றும் கனரக ஆயுதங்களின் செறிவான சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கண்ணிவெடிகள், பொறிவெடி வயல்களை உருவாக்கி கொலை வலயங்களுக்குள் எதிரிகளை இழுத்து பெரும் தொகையில் கொன்றொழிக்கும் நடவடிக்கையில் பெருவெற்றி கண்டுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் படைத்தரப்புக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இதுவரை இடம்பெற்ற மோதல்களில் 12 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும் களமுனை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனிடையே தமது தரப்பில் 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மூவரைக் காணவில்லை என்றும் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியிலிருந்து தென்மேற்கு திசையில் அக்காரயன் 15 கிலோமீற்றர் தொலைவிலும் நாச்சிக்குடா 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Monday, October 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment