Wednesday, October 22, 2008

சாமந்திப் பூ டீ குடித்தால் நீரிழிவு நோய் பாதிக்காது

சாப்பாட்டுடன் சீமை சாமந்திப் பூ டீயும் சேர்த்து குடித்தால், நீரிழிவு நோய் வராது. நீரிழிவு நோயினால் ஏற்படும் நரம்பு பாதிப்பு, பார்வையிழப்பு, சிறுநீரக கோளாறு போன்றவையும் ஏற்படாது என, ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது:உலக நாடுகள் பலவற்றிலும் "டைப்-2"வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மன அழுத்தம், ஜலதோஷம், மாதவிலக்கு கோளாறுகள் போன்றவை உட்பட பல பிரச்னைகளை தீர்க்க சீமை சாமந்திப் பூ, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.நாம் சாப்பிடும் போது, இந்த சாமந்திப் பூவில் தயாரான மூலிகை டீயையும் சேர்த்துக் குடித்தால், நீரிழிவு நோய் வராது.இந்த சீமை சாமந்திப் பூவில் தயாரான டீயை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில், அவற்றின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இன்னும் பல சோதனைகள் மூலம் இவை உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comments:

Unknown said...

பிரமாதம்.