கிரிக்கட்உலகின்சாதனைகள் பலவற்றின் சொந்தக்காரர் சச்சின். சச்சின் என்றால் கிரிக்கட் வீரர் என்பதனை விட சாதனைகளின் சொந்தக்கார் என்றும் கூறலாம். கிரிக்கட் உலகின் பிதா மகன் டொன் பிரட்மன் பாராட்டிய வீரர்களில் சச்சினும் ஒருவர்.
உலகின் பிரபலமான பந்து வீச்சாளர்கள் அனைவரும் சச்சினுக்கு பந்து வீசுவது கடினம் என்று ஒரே குரவில் உரத்துக் கூறியுள்ளனர். ரன் குவிக்கும் மிஷின் என்று புகழ்ந்து பேசப்படும் சச்சினின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது சாதனைகளைத் தொடுவது அவருக்கு கைவந்த கலை.
துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் சச்சின் பந்து வீச்சிலும் எதிரணியின் வெற்றியை தட்டிப் பறித்தார். எதிர்பாராத வேளையில் எதிரணி வீரர்களின் முக்கியமான விக்கட்டை சச்சின் வீழ்த்தியதால் வெற்றி பெற வேண்டிய அணிகள் தோல்வியடைந்தன.
வாய்ச் சவாடல் பேசி தனது வீரத்தை சச்சின் காட்டியதில்லை. தன் மீது வீசப்படும் விமர்சனக் கணைகளை துடுப்பு மூலம் தடுத்து விடுவது அவரது பாணி. டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த லாராவின் ஓட்ட எண்ணிக்கையை இலங்கையில் சச்சின் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் எவரும் சோபிக்கவில்லை. சச்சினும் அதற்கு விதிவிலக்கல்ல. சச்சினின் உடல் நிலை அவருக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. விளையாடுவதற்குரிய உடல் நிலை இல்லாமையினால் போட்டிகளைத் தவிர்த்து வருகிறார்.
எதிரணி வீரரால் அதிகம் குறி வைக்கப்படும் வீரராக சச்சின் உள்ளார். சச்சினுக்கு எப்படிப் பந்து வீசினால் அவர் அவுட்டாவார் என்று தெரிந்து வைத்திருக்கும் பந்து வீச்சாளர்கள் அவரைக் குறி வைத்து பயிற்சி செய்வார்கள். பந்து வீச்சாளர்களின் எதிர்பார்ப்பை பல சந்தர்ப்பங்களில் சச்சின் தவிடு பொடியாக்கியுள்ளார்.
சச்சினின் விக்கட்டை வீழ்த்தினால் உலக சாதனை செய்தது போல் பந்து வீச்சாளர்கள் துள்ளிக் குதிப்பார்கள்.
அணியில் அறிமுகமாகும் புதிய பந்து வீச்சாளர்களுக்கு சச்சின் மீது ஒருதலைக் காதல் பிறந்து விடுகிறது. சச்சினின் விக்கட்டை வீழ்த்த வேண்டும் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளிப்பார்கள். அவர்களின் பந்து வீச்சு சச்சின் வீழ்ந்தால் பிறவிப் பயனடைந்தது போல் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.
லாராவின் சாதனையை முறியடித்து 12 ஆயிரம் ஓட்டங்களை கடந்து விட்டார் சச்சின். அவரது சாதனையை முறியடிக்கும் சந்தர்ப்பம் டிராவிட், பொண்டிங் ஆகிய இரண்டு வீரர்களுக்கு உள்ளது. டிராவிட் தொடர்ந்து விளையாடுவாõர என்ற சந்தேகம் உள்ளது. சச்சினின் சாதனையை முறியடிக்கும் வரை பொண்டிங் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆபிரிக்க வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது ஓய்வை அறிவித்து விடுவார்கள். அவர்களின் ஆட்டத்திறன் மங்கிவிட்டால் அணியில் இருந்து தூக்கியெறிப்படுவார்கள். 2011 ஆம் ஆண்டுவரை விளையாடப் போவதாக சச்சின் அறிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டுவரை டெஸ்ட் பேட்டிகளிலும் சச்சின் விளையாடினால் அவரின் சாதனையை இப்போதைக்கு யாராலும் முறியடிக்க முடியாது.
வானதி
நன்றி:மெட்ரோ
0 comments:
Post a Comment