Sunday, November 30, 2008

இந்தியா...26’ : அதிர்ச்சியூட்டும் எஸ்.எம்.எஸ்.

உலகையே உலுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் கடந்த இருபத்து ஆறாம் தேதி நடந்தது. இந்தியாவில் பல மோசமான சம்பவங்கள் 26 ம் தேதியில் நடந்திருப்பதை பட்டியலிட்டு சென்னையில் பல செல்போன்களிலும் ஒரு எஸ்.எம்.எஸ் உலவிக்கொண்டிருக்கிறது.
குஜராத் பூகம்பம் நிகழ்ந்தது ஜனவரி 26
இந்தியாவை சுனாமி தாக்கியது டிசம்பர் 26
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் பிப்ரவரி 26,
குஜராத் பெருவெள்ளம் ஜூன் 26
மும்பையில் கடுமழை பெய்தது ஜூலை 26
அகமதாபாத் குண்டுவெடிப்பு செப்டம்பர் 26
தற்போது எட்டாவது சம்பவமாக நவம்பர் 26ல் மும்பையில் தீவரவாதிகள் தாக்குதல்
நடந்திருக்கிறது என்று சொல்லிவிட்டு,
அடுத்த 26 சம்பவம் என்னவாக இருக்குமோ என்ற அச்ச உணர்வையும் அந்த எஸ்.எம்.எஸ். வெளிப்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்து பத்திரிக்கைகள் வலியுறுத்தல் : ஏற்க மறுத்த பீட்டர்சன்

மும்பையின் தீவிரவாத தாக்குதலால் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா வந்த இங்கிலாந்து அணி பயந்தது.
ஏழு ஒரு நாள் போட்டிகளில் இதுவரை நடந்து முடிந்த ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. மீதமிருக்கும் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி பயந்ததால், மும்பை தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிட்டது என்பதை நிரூபிக்கவும், இந்தியாவுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இது. அதனால் தொடர்ந்து விளையாட வேண்டுமென்று இங்கிலாந்து பத்திரிக்கைகளே வலியுறுத்தின.
ஆனாலும் அதையெல்லாம் ஏற்க மறுத்துவிட்டார் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கெவின் பீட்டர்சன். அவர், வீரர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாததால் இங்கிலாந்து திரும்புகிறோம். இந்தியாவில் விளையாட பாதுகாப்பு இருந்தால் மீண்டும் விளையாடுவோம் என்று சொல்லிவிட்டுமும்பையின் தீவிரவாத தாக்குதலால் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா வந்த இங்கிலாந்து அணி பயந்தது.
ஏழு ஒரு நாள் போட்டிகளில் இதுவரை நடந்து முடிந்த ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. மீதமிருக்கும் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி பயந்ததால், மும்பை தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிட்டது என்பதை நிரூபிக்கவும், இந்தியாவுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இது. அதனால் தொடர்ந்து விளையாட வேண்டுமென்று இங்கிலாந்து பத்திரிக்கைகளே வலியுறுத்தின.
ஆனாலும் அதையெல்லாம் ஏற்க மறுத்துவிட்டார் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கெவின் பீட்டர்சன். அவர், வீரர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாததால் இங்கிலாந்து திரும்புகிறோம். இந்தியாவில் விளையாட பாதுகாப்பு இருந்தால் மீண்டும் விளையாடுவோம் என்று சொல்லிவிட்டு இன்று தனது அணியுடன் தாயகம் புறப்பட்டுவிட்டார்.இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேசிய இந்திய கிரிக்கெட் போர்டு, டெஸ்ட் போட்டி மீண்டும் தொடரும். இங்கிலாந்து வீரர்கள் மீண்டும் வந்து விளையாடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறது. இன்று தனது அணியுடன் தாயகம் புறப்பட்டுவிட்டார்.இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேசிய இந்திய கிரிக்கெட் போர்டு, டெஸ்ட் போட்டி மீண்டும் தொடரும். இங்கிலாந்து வீரர்கள் மீண்டும் வந்து விளையாடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறது.

Saturday, November 22, 2008

13 ஆம் எண்ணைக் கண்டு பயப்படுவது சரியா?

13 பற்றிய பயம்
13-ஆம் எண் பற்றிய பயம் மேல்நாட்டு மூடமதியாளர்களிடமிருந்து இந்திய முட்டாள்களிடம் பரவியுள்ளது. 12-க்கும் 14-க்கும் இடையில் வரும் ஒரு எண் என்ற எண்ணமே இல்லாமல் அதைக் கண்டு பயந்து சாகும் மனிதர்களை முட்டாள்கள் என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?
உலகின் பல பெரிய நகரங்களிலும் உள்ள மிகப் பெரிய ஓட்டல்களிலும்கூட, 13-ஆம் தளமோ, 13-ஆம் எண் அறையோ இல்லாமல் உள்ள அவலம்! 12ஏ எனப் பெயர் சூட்டி விடுகிறார்கள். விமானங்களின் இருக்கை எண்களிலும் இதே மூடத்தனம்தான்.
மிகவும் அசிங்கமானது ஒன்று. இந்தியாவில் இருக்கிறது. மிகவும் முற்போக்கு நாங்கள்தான் என்று தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளும் கேரளாவில், உயர்நீதிமன்றக் கட்டடத்தில் 13-ஆம் எண் அறையே கிடையாது.
சான்ஃபிரான்சிஸ்கோ (அமெரிக்காவில்) நகரில் 13-ஆம் அவென்யூவை யாராவது தேடினால், அவ்வளவுதான்! கண்டுபிடிக்கவே முடியாது. 12-க்கு அடுத்து 14 தான். இடையில் பன்ஸ்டன் அவென்யூ எனப் பெயர் வைத்து விட்டார்கள்!
இதே அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் முடிந்தபிறகு, அதில் ஈடுபட்ட கேப்டன் வில்லியம் ஃபவுலர் என்பவர் 13 கிளப் என்ற ஒரு கிளப் ஆரம்பித்தார். மொத்த உறுப்பினர்கள் 13. கூடியது அறை எண் 13 இல் (நிக்கர்போக்கர் விடுதி) கூடிய நாள் 13-ஆம் தேதி (ஜனவரி 1881). ஒருவரையொருவர் வாழ்த்திக் கொண்டனர். சாகப் போகும் நாம் வணக்கம் செலுத்துகிறோம் (Nos Morituri Te Salutamus) என்பது வாழ்த்து வாசகம்!
விருந்து உண்டு நல்லபடியாகவே கலைந்தனர்! மூடநம்பிக்கையாளர்கள் கூறுவதுபோல, எந்த ஒருவரும் சாகவில்லை (13 பேர் கலந்து கொண்ட விருந்தில் கலந்து கொண்டபோதுதான் ஏசு, காட்டிக் கொடுக்கப்பட்டுப் பின்னர் கொல்லப் பட்டார் என்கிற கதைதான் மூடநம்பிக்கைக்குக் காரணி)
இனிய பருவம் எனப் பொருள்படும் விதத்தில் Sweet Teen என்பதே, 13-ஆம் வயதிலிருந்துதான் தொடங்குகிறது. பின் எப்படி அதைக் கண்டு டீன் ஏஜைக் கொண்டாடும் ஆள்களே மிரள்கிறார்கள்?

(Bharti) Airtel புரட்சி! இலங்கையில்.

கடந்த ஓராண்டுகாலமாக, எப்ப இங்க Airtel வருது என்பதே இளந்தலைமுறையின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாய் போய்விட்டது.Tower போட்டுட்டாங்களாம், வேலைக்கு ஆளெடுக்கிறாங்களாம், அலுவலகங்கள் திறந்திட்டாங்களாம், டயலொக் ஓட பேச்சு வார்த்தையாம் எண்டு நாளுக்கு நாள் சூடான செய்திகள் வேறு..
அடுத்தமாதம் அடுத்தமாதம் என்று எதிர்பார்ப்பைக் கிளறிவிட்டு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது Airtel வருகை.
தற்போது சடுதியாக இங்குள்ள மற்ற செல்பேசிச்சேவை வழங்கும் நிறுவனங்கள் எல்லாம் அதிரடிக் கட்டணக் குறைப்புக்களைச் செய்ய வெளிக்கிட்டிருப்பது வேறு Airtel பீதியை இன்னும் மோசமாக்குகிறது .
கட்டணங்களை அநியாயத்துக்கு அதிகரித்து வைத்திருந்த மகாராஜாவின் டயலொக் கூட விபரீத (!) விலைக்குறைப்புக்களை தற்போது செய்திருப்பது மொபைல் வழிபாட்டாளர்களாக மாறிவிட்டிருக்கும் எங்கள் இளந்தலைமுறைக்கு தீவிர ஆய்வுக்குரிய விடயமாகப் போய்விட்டது.
Airtel வந்தால் சமாளிக்கிறதுக்குத்தான் இப்பவே கட்டணங்களைக்குறைத்து தயாராகிறாங்களாக்கும் எண்டது அவர்களது முடிவு.
இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் சரிகிறது..
அன்றாடம் ஒருவேளைச்சாப்பாட்டை வாங்கும் சக்தியை பெரும்பாலான மக்கள் இழந்து வருகிறார்கள்..
இலங்கைச் சனத்தொகை முழுமையும் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, சீனி விலை ஏறுகிறது .
பெரும்பகுதி பயன்படுத்தும் பெற்றோலும் விலை ஏறுகிறது.
அநேகமாக அனைவரும் பயன்படுத்தும் மின்சாரக்கட்டணம் ஏறுகிறது.
நகரங்கள் எல்லாமே நம்பியிருக்கும் குழாய் நீரும் ஏறுகிறது.
ஆனால் நாட்டில் மிகச்சிறுபான்மையானவர்களே பயன்படுத்தும் மின்னணுக் கருவிகளும், செல்பேசியும், பொழுதுபோக்குப்பண்டங்களும் மட்டும் ஏன் விலைகுறைந்துகொண்டே வருகிறது?
ஏன்?
அரிசி விலையைக்குறைப்பதைவிட, செல்பேசிக்கட்டணத்தைக்குறைத்து அதன் பாவனையைப் பரவலாக்குவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமா?
அல்லது அரிசியை உற்பத்தி செய்வதை விட உயர் தொழிநுட்பம் பயன்படுத்தப்படும் மின்னணுக்கருவிகளின் உற்பத்திச்செலவு குறைவானதா?
யார்காதில் யார் பூச்சுற்றுகிறார்கள்?
இதற்குப்பதிலைத்தான் எங்கள் தலைமுறை தேடக்காணோம்.
சடாகோபனும் அவரது துணைவியாரும் மேடையேற்றிய உலகமயமாக்கல் குறித்த நடன ஆற்றுகையில் ஒரு காட்சி வரும், பெரிய செல்பேசி ஒன்றை பூப்போட்டு பூசைகாட்டி கண்ணில் ஒற்றி வழிபட்டு "நாக்கியா சாமிக்கு அரோஹரா!" ஊர்வலாமாய் எல்லோரும் தூக்கிக்கொண்டு திரிவார்கள்.
எங்கும் Airtel, எதிலும் Airtel..
அதுசரி, இந்த Airtel என்றால் என்ன?
இந்தக் கம்பனி மீது இப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆர்வமும் எப்படி இலங்கையர்க்கு வந்தது?
ஒருகாலத்தில் இலங்கையில் சீரிய சேவை வழங்கி பின் மூடப்பட்ட கம்பனியா இது?
அல்லது இலங்கை மக்கள் விசுவாசிக்கும் பெருவணிகரின் அடுத்த கம்பனியா இது?
அல்லது மில்க்வைற் முதலாளி Airtel நடத்தப்போறாரா?
யார் இந்த Airtel?
இலங்கையில் முன்பின் யாவாரம் செய்திராத இந்த கம்பனி, இலங்கையின் மற்றக்கம்பனிகளை அச்சுறுத்தவும், மக்களிடம் இவ்வளவு எதிர்பார்ப்பு அலையை தோற்றுவிக்கவும் நிச்சய வெற்றி ஒன்றைப்பெறும் வாய்ப்பினைப்பெற்றுக்கொள்ளவும் கூடியதாக ஆனது எப்படி?
Airtel இன் அந்த மூலதனம் எது?
இந்தக் கேள்விக்கான பதிலைத்தேடும்போது இந்தியாவிலுள்ள பெரிய முதலாளிகளின் வணிக நலனோடு தொடர்புபட்ட இந்திய ஆளும் வர்க்கத்தின் இலங்கை மீதான ஊடக, கலாசாரப் படையெடுப்பினைப் புரிந்துகொள்ள முடியும்.
சிங்கள மக்கள் இந்தி, பொலிவூட் மாய்மாலங்களுக்கூடாகவும், தமிழ் முஸ்லிம் மக்கள் தென்னக சினிமா, தொலைக்காட்சிகளின் ஏமாற்றுக்களாலும் கவர்ந்திழுக்கப்பட்டு இந்திய கலாசாரத்திணிப்புக்கு மிக இலகுவாக ஆட்பட்டுவிடுகிறார்கள்.
பொலிவூட் ஆகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும் எல்லாமே மனிதர்களை இலகுவாக சுண்டியிழுக்கும் வணிக உத்திகளை மிகச்சீரான முறையில் பயன்படுத்துகின்றன.
பாலியல் தேவைகள் வன்முறையோடு ஒடுக்கப்பட்டு நோய்க்கூறுகளுடன் நிற்கும் மக்கள் கூட்டத்திடம், போரழிவுகளால், போர்ப் பேரங்களால் நாளும் சுரண்டப்படும் மக்களிடம், மலினமான பாலியல் , மட்ட அரசியல் சரக்குகளை, வெற்று விளையாட்டுச்சரக்குகளைக் கடைவிரித்தபடி இந்த ஊடகங்கள் ஆக்கிரமிப்புப் போர் புரிகின்றன.
இந்த தொலைக்காட்சி ஊடகங்கள் இப்படையெடுப்பைச்செய்வதற்கு பணம் கொடுப்பவர்கள்யார்? இத்தகைய பகட்டு நிகழ்ச்சிகளையும் சினிமா வரைகலை மாய்மாலங்களையும் செய்யச் செலவழியும் காசினை வழங்குபவர்கள் யார்?
இந்தியப் பெரு முதலாளிகளே.
அவர்களுக்கு என்ன லாபம்?
அரை மணிநேர நிகழ்ச்சியைப் பார்க்க உட்கார்ந்து, அதில் 20 நிமிடங்களை விளம்பரம் பார்த்தே தொலைக்கிறோமே... எங்களுடைய நேரம் தான் அவர்களுடைய லாபம்.
எமது நேரத்தைச்சுரண்டி அதனுள் தமது விளம்பரங்களை வலிந்து திணித்து எமது சிந்தனையை அடைத்துக்கொள்ள முடிவதே அந்த முதலாளிகளின் பெரு வெற்றி.
அவர்களது ஊடகப்பொறிகளுக்குள் மாட்டுப்பட்டு , நேரத்தையும் காவுகொடுத்து மூளைக்குள்ளும் அவர்களுக்கு வசதியான போதனைகளை தூக்கிச்சுமந்துகொண்டு அவர்கள் ஆட்டிவைத்த பொம்மைகளாக நாம் அலைகிறோம்.
அவர்கள் திரும்பத்திரும்ப ஆயிரம் முறை போதிப்பதை அப்படியே குடித்து உள்வாங்கி பேச்சிலும் எழுத்திலும் நினைவிலும் கனவிலும் ஒழுகவிட்டுத்திரிகிறோம்.
ஊடகங்கள் வழியான இந்தச் சிந்தனை ஆக்கிரமிப்பு, போதனை எவ்வளவு வெற்றிகரமான யாவார உத்தி என்பதைத்தான், இலங்கையின் தற்போதைய Airtel காய்ச்சல் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறது.
முதலாளிகளின் ஏவற் கூலிகளாக வலம் வரும் ஏ ஆர் ரஹ்மானின், இன்னும் பல கலைஞர்களின் உழைப்பு எல்லாவற்றையும் அழகாய் தொகுத்து கோடிக்கணக்காய் காசைக்கொட்டி திணி திணி என்று எம்மீது திணித்த திணிப்பின் பெறுபேறு, கோடிகோடியாய் விளைச்சல் கொடுக்கப்போகிறது.
கண்ணால் பார்க்கும்படி மிகத்தெளிவாக இந்த ஊடக/கலாசார ஆக்கிரமிப்பின் முற்றுமுழுதான வணிகமுகத்தை விளங்கப்படுத்தியதற்காக, இந்த Airtel காய்ச்சலுக்கு நன்றிகூடச்சொல்லலாம்.
தெற்காசியப்பிராந்தியத்தின் ஏகாதிபத்திய சக்தியான இந்திய ஆளும் வர்க்கத்தின் இலாபப்பெருக்க உத்தியே இவ்வளவென்றால், அந்த இந்தியாவிலேகூட தனது கலாசார ஆதிக்கத்தை நிலைநிறுத்தி சுரண்டிக்கொழுக்கும் உலக ஏகாதிபத்தியங்களின் உத்திகளும் முறைவழிகளும் எவ்வளவு நுணுக்கமாயிருக்கும்? எவ்வளவு கோரமாயிருக்கும்?
கலாசாரக் கலப்பாம், சிறுபான்மைக் கலாசாரங்கள் பொதுப்போக்குக்கு (mainstream) கொண்டுவரப்படுகின்றனவாம்.
ஐயோ ஐய்ய்ய்ய்ய்யோ...

Friday, November 21, 2008

ஒரு கனவும் இந்தக் கண்ணீரும்...


01
''என் நண்பர்களே.. நான் கனவு காண்கிறேன்.. நம் உடலின் நிறத்தால் இன்று நாம் இத்தனை பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாளையும் இந்த பிரச்சனைகள் இருக்கத் தான் போகின்றன.
ஆனாலும், எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
நிற பேதங்களையெல்லாம் தாண்டி நாம் அனைவரும் சமம் தான் என்று ஒரு நாள் இந்த தேசம் சொல்லும்...
பல ஆண்டுகளாக அடிமைகளாக நடத்தப்பட்ட நம் மக்கள் வெள்ளை இனத்தினரோடு இதோ இந்த ஜார்ஜிய மலைப் பகுதியில் ஒன்றாக, சகோதரர்களாக நடமாடுவார்கள்...
ஆம், என்னிடம் ஒரு கனவு இருக்கிறது.
இதோ, அநீதி உச்சகட்டத்தில் நின்று பேயாட்டம் ஆடும் இந்த மிஸிஸிபி நதிக் கரையோரம் ஒரு நாள் சுதந்திரம்.. நியாயம் என்ற சோலை பூக்கும்.
என் நான்கு குழந்தைகளும் ஒரு நாள் இந்த நாட்டில் அவர்களது நிறத்தால் எடை போடப்படாமல், அவர்களின் செயல்களால், மனதால் எடைபோடப்படுவார்கள்..
ஆம், என்னிடம் ஒரு கனவு இருக்கிறது"
கருப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடி அதற்காக துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான வீரன் மார்ட்டின் லூதர் கிங்கின் இந்த உரை கருப்பின மக்களை மட்டுமல்ல, வெள்ளையின மக்களின் இதயங்களையும் கண்ணீ்ர் விடச் செய்தது.
அவர் பேசியது 1963ம் ஆண்டில்... லட்சக்கணக்கான கருப்பின மக்களைத் திரட்டி வாஷிங்டன் நோக்கி பேரணியாகச் சென்று அந்த இன மக்களுக்கு ஓட்டு போடும் உரிமை உள்ளிட்ட சம உரிமைகளும், வேலைகளும் வேண்டும் என்று கோரி கிங் ஆற்றிய உரை இது.
இது வெள்ளையின மக்களின் இதயங்களைத் துளைத்த உரை, கருப்பின மக்களின் போராட்டத்தில் வெள்ளையர்களையும் பங்கேற்கச் செய்த உரை.
ஆயுதமே இல்லாமல் போரை நடத்தி வெள்ளையர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பிய மகான் மார்ட்டின் லூதர் கிங்.
கிங்கை இப்படி அகிம்சைப் போராட்டக்காரராக மாற்றியது இந்தியா தான். தனது அகிம்சையால் இந்தியா சுதந்திரம் வாங்கிக் காட்டியதில் ஆச்சரியமும் ஆனந்தமும் கொண்ட கிங் 1959ம் ஆண்டில் இந்தியா வந்தார்.
மகாத்மா காந்தி உயிருடன் இல்லாத நிலையில் அவரது குடும்பத்தைச் சந்தித்து காந்தி குறித்துப் பேசிவிட்டு இப்படிச் சொன்னார்..
இந்த இந்திய மண்ணில் நின்று சொல்கிறேன்.., ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உலகிலேயே ஒரு மாபெரும் ஆயுதம் உண்டென்றால் அது அகிம்சை தான். எந்த சக்தியாலும் தப்ப முடியாத புவியீர்ப்பு விசை மாதிரி என்னை காந்தி ஈர்த்திருக்கிறார்.. இதோ அவர் சொன்ன ஆயுதத்தோடு நான் நாடு திரும்புகிறேன்.. என்றார்.
இப்படி மார்ட்டின் லூதர் கிங் ஒரு புறம் மக்களைத் திரட்ட, இன்னொரு புறம் வேறு பல சாதாரண கருப்பின மக்களும் தங்களது சுய மரியாதைக்காக உரிமைக்காக ஆங்காங்கே அகிம்சை முறையில் போராடிக் கொண்டிருந்தனர்.
1955ம் ஆண்டில் 15 வயதே ஆன கிளாடெட் கோல்வின் என்ற பள்ளிச் சிறுமி வெள்ளைக்காரருக்கு தனது இருக்கையைத் தர மறுத்தாள்.
அதே ஆண்டில் ரோஸா பார்க்ஸ் என்ற கருப்பினப் பெண் மோண்ட்கோமெரி என்ற இடத்தில் பஸ்சில் வெள்ளையினப் பெண்ணுக்கு இடம் தர மறுத்து சிறை போனார்.. இதையடுத்து அந்த ஊரில் பேருந்துகளை புறக்கணிக்குமாறு கருப்பின மக்களுக்கு உத்தரவிட்டார் மார்ட்டின் லூதர் கிங்.
பஸ்களை புறக்கணித்து நடக்க ஆரம்பித்தனர் கருப்பின மக்கள். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. 385 நாட்கள்.. யாரும் பேருந்தில் ஏறவில்லை.. கிங் வீடு மீது குண்டு வீசப்பட்டது, அவர் அசரவில்லை.
இதையடுத்து பஸ்களில் அனைவரும் சமமே, யாரும் அமரலாம், யாரும் யாருக்கும் இடம் தர வேண்டியதில்லை, எழுந்து நிற்க வேண்டியதில்லை என்று முதல் வெற்றி கிடைத்தது கருப்பின மக்களுக்கு.
ஆம்.. பேருந்தில் தான் கிடைத்தது முதல் சுதந்திரம்!
அடுத்தடுத்து வந்தன இன வேறுபாடு தடை சட்டம், கருப்பினருக்கு அரசுத் துறைகளில் வேலை தரும் சட்டம், அடிப்படை மனித உரிமைகள் தரும் சட்டம், கருப்பின மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரும் சட்டம்...
கடைசியாக 1965ல் வந்தது கருப்பர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கும் சட்டம்.
இந்த சட்டங்கள் அடிமைத்தனத்தை அதிகாரப்பூர்வமாக ஒழித்தாலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கருப்பின மக்களுக்கு முழு அதிகாரமும் கிடைத்ததா என்றால் இல்லை.
இதனால் அவ்வப்போது நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைகளும் மூண்டன.
கருப்பின மக்களால் செனட், காங்கிரஸ் என நுழைய முடிந்ததே தவிர அமைச்சர்கள் அந்தஸ்துக்கோ ஆட்சியில் முக்கிய பதவிகளைப் பிடிக்கவோ அவர்கள் எளிதில் அனுமதிக்கப்படவில்லை.
அவர்களது தலைக்கு மேல் ஒரு கண்ணுக்குத் தெரியாத Glass ceiling மிக உறுதியாகவே கட்டப்பட்டிருந்தது.
இந்தத் தடையை உடைக்கும் ஒரு சக்திக்காகத் தான் ஏங்கிக் கொண்டிருந்தது அமெரிக்கா.
மார்ட்டின் லூதர் கிங்குக்குப் பி்ன் அந்த இடத்தை நிரப்பக் கூடிய மாபெரும் போராளி கருப்பர் இனத்தில் இருந்து வரவில்லை.
லூதர் கிங்கால் அடையாளம் காணப்பட்ட ஜெஸ்ஸி ஜேக்சனால் கூட இந்த உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முழுமையாக எடுத்துச் செல்ல முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனாலும் அவர் தனது பங்குக்கு போராடித்தான் பார்த்தார். இதனால் அவரை ஜனநாயகக் கட்சி 1984லும் 1988லும் அதிபர் வேட்பாளராக நிறுத்தும் அளவுக்கு அமெரிக்காவில் நிலைமை மாறியதும் உண்மை.
இவருக்கு முன் சிரிலி சிஸ்ஹோல்ம் என்ற கருப்பருக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது.
ஆனால், இருவராலுமே லூதர் கி்ங் மாதிரி வெள்ளையின மக்களின் மனசாட்சியையும் கருப்பர் இன மனசாட்சியையும் ஒரு சேர தொட முடியவில்லை. இதனால் கருப்பர் இன அதிபர் என்பது ஒரு பகல் கனவாகவே தொடர்ந்தது.
இந்த நிலையில் தான் சிகாகோவில் ஒரு நட்சத்திரம் தோன்றியது...

02
ஒபாமாவின் தந்தை ஹூசேன் ஒபாமா கென்யாவைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் படிப்பதற்காக ஹவாய் தீவுக்கு வந்தவர். பின்னர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றார். ஹவாயில் படித்தபோது அங்கு கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த வெள்ளையினப் பெண்ணான ஆன் டுன்ஹாமை சந்திக்க, இருவருக்கும் காதல் மலர, 1961ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.ஒபாமா பிறந்ததும் ஹவாய் தீவில் தான். அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது பெற்றோர் பிரிந்துவிட்டனர். தந்தை கென்யாவுக்கே திரும்பிவிட தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்தார் ஒபாமா.பின்னர் டு்ன்ஹாம் லோலோ சோயிடரோ என்பவரை மணக்க , குடும்பம் இந்தோனேஷியாவுக்கு இடம் பெயர்ந்தது. 10 வயது வரை ஒபாமா வளர்ந்தது ஜகார்த்தாவில் தான். பள்ளிப் படிப்பை அங்கே ஆரம்பித்த ஓபாமா, பின்னர் அமெரிக்கா திரும்பி தாய் வழி பாட்டி, தாத்தாவுடன் தான் வளர்ந்தார்.லாஸ் ஏஞ்செலஸ், நியூயார்க் கல்லூரிகளில் பொலிடிகல் சயின்ஸ் படித்த ஒபாமாவின் ஆர்வம் சர்வதேச உறவுகளில் இருந்தது.இதையடுத்து சிகாகோவில் வளரும் சமூகங்கள் திட்டம் என்ற கருப்பினரின் வளர்ச்சிக்கு உதவும் கிருஸ்துவ அமைப்பின் திட்டத்தில் பணிக்குச் சேர்ந்தார். அதுவரை அரசியல் ஆர்வம் ஏதும் இல்லாமல் இருந்த ஒபாமாவின் வாழ்க்கையை மாற்றியது இந்தப் பணி தான்.வெள்ளையின குடும்பத்தில் வளர்ந்த ஒபாமாவுக்கு கருப்பின மக்கள் படும்பாட்டை நேரடியாக அறியும் வாய்ப்பு கிடைத்தது.இதைத் தொடர்ந்து 1988ம் ஆண்டில் சட்டம் படிக்க ஹாவர்ட் சட்டப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு பல்கலைக்கழக ஜர்னவலில் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவரது அறிவுப்பூர்வமான எழுத்துக்கள் அனைவரையும் கவர, அந்த பத்திரிக்கையை தலைமையேற்கும் வாய்ப்பும் வந்தது.அதில் அவர் எழுதிய கட்டுரைகள் பல்வேறு அமெரிக்க பத்திரிகளைகளிலும் வெளியாயின. தனது புதிய சிந்தனைகளால் எழுத்துக்களால் பலரின் கவனத்தையும் ஈர்த்தார் ஒபாமா.சட்டப் படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சிகோகோவுக்குத் திரும்பிய அவர் 'இன உறவுகள்' குறித்த புத்தகத்தை எழுத ஆரம்பித்தார். இதையறிந்த சிகாகோ சட்டப் பள்ளி, அவருக்கு தேவையான நிதி உதவியையும் வேலையும் தர முன் வந்தது.வேலையோடு புத்தகம் எழுதுவது சிரமமாக இருக்கவே, எழுத்துப் பணிக்கு முழு நேரத்தையும் ஒதுக்குவதற்காக, வேலையை உதறிவிட்டு இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு தனது மனைவி மிசேலுடன் இடம் பெயர்ந்தார் ஒபாமா.1995ம் ஆண்டில் என் தந்தையின் கனவுகள் என்ற தலைப்பில் அவர் எழுதிய அந்தப் புத்தகம் வெளியானது.இதையடுத்து இலினாய்ஸ் திரும்பிய ஒபாமா அந்த மாகாணத்தில் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் திட்டத்துக்கு தலைமை தாங்கினார் ஒபாமா. அங்கு ஓட்டு போடுவதைப் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் இருந்த 1.5 லட்சம் கருப்பினத்தினரை வாக்காளர் பட்டியல் சேர வைத்துக் காட்டினார்.அப்போது மக்களோடு மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைக்கவே அதை மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டார்.சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் சட்ட விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டே சிவில் உரிமைகளுக்காகப் போராடும் சட்ட அலுவலகத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நீதிமன்றங்களின் படியேற ஆரம்பித்தார். சிகோகோ மக்களின் செல்லப் பிள்ளையானார்.இந் நிலையில் வந்தது திருப்பம். 1996ம் ஆண்டில் இலினாய்ஸ் செனட்டுக்கு தேர்வானார். ஏழைகளுக்கு ஆதரவான சட்டங்களை அமலாக்குவதில் தீவிரம் காட்டினார்.ஏழை மக்களின் வரியைக் குறைக்கவும், அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை கிடைக்கவும், குழந்தைகள் நலத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவும் சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தி அந்த சட்டங்கள் நிறைவேறவும் காரணமாக இருந்தார்.ஒபாமாவின் இந்த நேர்மை, ஏழை-எளியவர்கள் மீதான அவரது அன்பும் வெள்ளையின மக்களையும் அவர்பால் ஈர்த்தது. இதையடுத்து மீண்டும் மீண்டும் இரண்டு முறை இலினாய்ஸ் மாகாண செனட்டுக்கு தேர்வானார்.2005ம் ஆண்டு அமெரிக்க நாட்டு செனட்டுக்கே தேர்வானார். அடுத்த இரண்டே ஆண்டுகளி்ல் அவரை அதிபர் தேர்தலில் முன் நிறுத்தும் அளவுக்கு இருந்தன அவரது செயல்பாடுகள்....
(தொடரும்)

Wednesday, November 19, 2008

பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் மரணம்!




அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதாராகவே வாழ்ந்தார் நம்பியார்.பாஜகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.

Friday, November 14, 2008

உங்களுக்குளே ஒரு குழந்தை ஒளிந்து கொண்டிருக்கிறது

மனநிலை பரிசோதனை (Transactional Analysis) பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்த தத்துவத்தின் படி வயது வித்தியாசம் இல்லாமல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மூன்று விதமான மனநிலைகள் (Ego States) உண்டு. அதாவது குழந்தை நிலை (Child Ego), பெற்றோரின் மனநிலை (Parent Ego) மற்றும் முதிர்ச்சியான மனநிலை (Adult Ego). உங்களுக்கு என்ன மனநிலை உள்ளது? இதை எப்படி கண்டுப் பிடிப்பது? ஒரு சிறிய பரிசோதனை முயற்சி இங்கே.முதல் பரிசோதனை. ஒரு கடற்கரைக்கு போகிறீர்கள். அப்போதுஅ. எதையும் யோசிக்காமல் ஓடிச் சென்று கடலில் பொத்தென குதிப்பீர்களா?
ஆ. காய்ச்சல் வந்து விடுமா அல்லது துணி நனைந்து விடுமா அல்லது பெரிய அலையில் முழுகிப் போய் விடுமோ என்று பயப்படுவீர்களா?
இ. இடம் பாதுகாப்பு ஆனது என்று உறுதி செய்து கொண்டு, நீச்சலுடை அணிந்து கொண்டு கடலில குதிப்பீர்களா?இரண்டாவது பரிசோதனைஉங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் உங்களூரில் ஓடுவது அன்றே கடைசி நாள். உங்கள் அலுவலகத்திலோ தணிக்கை நடக்கிறது.அ. உடல்நிலை சரியில்லை என்று அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு திரைப்படத்திற்கு போவீர்களா?
ஆ.அலுவலகம் முக்கியம் என்று திரைப் படத்தை தியாகம் செய்வீர்களா?
இ. அலுவலகத்தில் வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு இரவுக் காட்சிக்கு போக முயற்சி செய்வீர்களா?மூன்றாவது பரிசோதனை.உங்கள் அலுவலகத்தில் ஒரு பிரச்சினை. நீங்கள் செய்யாத தவறுக்கு உங்கள் மேலாளர் உங்களை கோபமாக குறை கூறுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?அ. செய்யாத தவறுக்கு எப்படி குறை கூறலாம் எப்படி பதிலுக்கு கோபப் படுவீர்களா?
ஆ. ஏதோ மேலாளாருக்கு பிரச்சினை. நம் மீது பாய்கிறார். இதை பெரிது படுத்த வேண்டாம் என்று விட்டு விடுவீர்களா?
இ. முதலில் அமைதியாக இருந்து விட்டு, சமயம் கிடைத்தும் சரியான விளக்கம் கொடுப்பீர்களா?நான்காவது பரிசோதனை.உங்கள் நண்பரது அலுவலகத்திற்கு போகிறீர்கள். அங்கு ஒரு அழகான பெண் வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு அந்தப் பெண்ணுடன் பேச வேண்டும் என்று ஆசை. நீங்கள் என்ன செய்வீர்கள்?அ. வலிய சென்று நன்றாக பேச முயற்சி செய்வீர்களா?
ஆ. நண்பரும் அவரது அலுவலகத்தினரும் நம்மை தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்று அமைதி காப்பீர்களா?
இ. நண்பரிடம் அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைக்க சொல்லி பின்னர் பேசுவீர்களா?மேலே கேட்கப் பட்ட கேள்விகளில் உங்களுடைய விடை அதிகமான சந்தர்ப்பங்களில் முதலாவதாக இருந்தால் உங்களிடம் அதிகமாக இருப்பது குழந்தை மனநிலை. இரண்டாவது பெற்றோரின் மனநிலை. மூன்றாவது முதிர்ச்சியடைந்த மன நிலை.ஒரு முக்கிய விஷயம். இந்த மனநிலைகளில் எதுவும் சரியானதோ அல்லது தவறானதோ இல்லை. அதே போல ஒரே நபருக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு மனநிலைகள் ஏற்படுவதுண்டு. அது மட்டுமல்ல, ஒரே நபருக்கு மூன்று மனநிலைகளும் வெவ்வேறு விகிதத்தில் கலந்திருப்பதும் உண்டு. மேலும் இந்த மனநிலைகள் வயது வித்தியாசம் பார்த்து வருவதில்லை. குழந்தைகள் சில விஷயங்களில் பெற்றோரின் மனநிலையை கொண்டிருக்கும். உதாரணமாக சில குழந்தைகள் வீட்டு வேலைகளில் பெற்றோருக்கு உதவுவது. சில சமயங்களில் பெரியவர்கள் குழந்தை மனநிலை கொள்வதும் உண்டு. உதாரணம் பெரியவர்கள் சிலர் வழிய வழிய ஐஸ்க்ரீம் சாப்பிடுவது.இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு என்ன அதிகமாக மனநிலை என்று?மேலே முயற்சித்தது மிகச் சிறிய பரிசோதனையே. மனவியல் நிபுணர்களால் மேலும் பல கேள்விகள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் மேற்கொண்டு மிக துல்லியமாக ஒருவரது மனநிலையை கண்டுபிடிக்க முடியும்.இப்போது ஒவ்வொரு மனநிலையின் தன்மைகள் பற்றி பார்போம்.குழந்தை மனநிலையின் நன்மைகள்மாறாத புத்துணர்ச்சி மற்றும் மாறாத புன்னகைஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எதிர்கொள்ளுதல் எல்லா விஷயங்களையும் புதியதாக நோக்குதல் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மற்றவர்களின் தவறுகளை நொடியில் மறப்பது மற்றும் மன்னிப்பது பொய் கலப்பில்லாத தன்மைகுழந்தை மனநிலையின் தீமைகள்.அதிக அளவிலான பயம், பின் விளைவுகள் தெரியாமல் ஏதாவது செய்து கஷ்டப் படுவது.பெற்றோர் மனநிலையின் தன்மைகள்.அதிக கண்டிப்பு, மற்றவர்களை குறை கூறுவது, எச்சரிக்கை உணர்வு அதிகம்.. சமய சந்தர்ப்பத்தை பொறுத்து இவற்றை நன்மைகளாகவும் கொள்ளலாம். தீமைகளாகவும் கொள்ளலாம்.முதிர்ச்சியடைந்த மனநிலையின் நன்மைகள்.எதையும் பகுத்து ஆராயும் தன்மை. நிதானமான உறுதியான மனநிலை.நாம் ஒரு குறிப்பிட்ட மனநிலையை அடைய முயற்சி செய்வதை விட எந்த சூழ்நிலையில் எந்த மனநிலையை கொண்டிருப்பது நல்லது என்ற தெளிவு பெற முயற்சிப்பது நல்லது.உதாரணமாக அலுவலக நேரத்தில் மற்றும் கவனமாக இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் முதிர்ச்சியடைந்த மனநிலை நல்லது. விடுமுறைக் காலங்களில் மற்றும் கொண்டாட்ட தருணங்களில் குழந்தை மனநிலை மகிழ்ச்சியை பூரணமாக அனுபவிக்க உதவும்.இப்போது சொல்லுங்கள். இன்று குழந்தைகள் நாள். வாழ்த்துக்களை நாமும் பரிமாறி கொள்ளலாம் அல்லவா?மகிழ்ச்சியான குழந்தைகள் நாள் வாழ்த்துகள்.