Monday, October 20, 2008

“துக்ளக்” சோ ராமசாமி ஆலகால விஷத்தை அப்படியே கக்கி இருக்கிறார்.


பார்ப்பன ஏடுகளைப் பகிஷ்கரியுங்கள்! பகிஷ்கரியுங்கள்! என்று சொல்ல வேண்டிய நாம் அருள்கூர்ந்து இந்தவார துக்ளக்கை படியுங்கள் என்று பரிந்துரை செய்கின்றோம்.பத்துப் பார்ப்பனர்கள் செத்திருந்தால்...அறிவியல் சிந்தனைகள் அப்படியே பொங்கி வழிகின்றன என்பதற்காகவா?இதுவரை வெளிவராத அரிய தகவல்கள் அங்கே அரும்பி நிற்கின்றன என்பதற்காகவா?புத்தம் புதிய கருத்துகளும், தகவல்களும் அதில் பூத்துக் குலுங்குகின்றன என்பதற்காகவா?மனித உரிமைக் குரல் மகத்தானதாக கேட்கிறது என்கிற எண்ணத்தாலா?அல்ல.. அல்ல. இவை எல்லாம் இடம் பெற்றால் அது பார்ப்பன சோ ராமசாமி கைவண்ணம் படும் இதழாக இருக்க முடியுமா?பார்ப்பனர் தமிழர்களின் பகைவனாக இன்று வரையிலும், இந்தநொடி வரையிலும் எந்த மட்டத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?பார்ப்பானாவது - தமிழனாவது அவர்களும் தமிழர்கள் தான் என்று பினாத்துகிற அறிவு ஜீவிகள் இன்னும் தமிழர்களிலே ஒரு சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்!முன்பு போல் எல்லா பார்ப்பனர்களும் இப்பொ ழுது இல்லை - எவ்வளவோ திருந்தி விட்டார்கள் - முனியாண்டி விலாஸ் ஓட்டலில் சாப்பிடுகிறார்கள் என்று சபாஷ் போடும் தமிழர்கள் இப்பொழுதும்கூட உண்டே!அவர்கள் எண்ணத்திலே ஒரு சவுக்கடி கொடுத்து, நாங்களாவது திருந்துவதாவது! தமிழர் எதிர்ப்பு எங்களின் இரத்தத்திலே ஊறிய ஒன்று! என்று பட்டவர்த்தனமாக பட்டாசு வெடித்துத் தெரிவிப்பது போல திருவாளர் சோ ராமசாமி ஆலகால விஷத்தை அப்படியே கக்கி இருக்கிறார்.ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் பொங்கி எழுந்து விட்டதாம்! தமிழ்நாட்டுக் கட்சிகள் போட்டிப் போட் டுக் கொண்டு போராட்டங்களை நடத்துகின்றன வாம். தாங்கிக் கொள்ள முடியவில்லை தர்ப்பைப்புல் கூட்டத்துக்கு - தகர டப்பாவை எடுத்துக் கொண்டு தப்பாட்டம் போடுகிறது.அட்டைப்படத்திலேயே அதன் ஆத்திரம் ஆரம்பமாகிறது. தலையங்கத்திலும் கண்டனம்.கம்யூனிஸ்ட் போராட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்காதது - ஏன்? - தனிக் கட்டுரைஇலங்கை பிரச்சினையை இப்படியும் தீர்க்க லாம் - கிண்டலும் கேலியும் கொட்டிக் கிடக்கும் கற்பனை உரையாடல்கம்யூனிஸ்ட் மேடையில் புலி ஆதரவுப் பிரச்சாரம்.ஒரு இதழில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதற்கான இத்தனை தலைப்புகளில் ஒரு பார்ப்பன இதழ் எழுதிக் குவிக்கிறது - எகத்தாளம் போடுகிறது - அக்னிக் குழம்பை அள்ளித் தெளிக்கிறது - ஆத்திரப் புயல் வெடிக்க அம்மாமி ஏடு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது - சகட்டு மேனியாகத் தமிழகத் தலைவர்களை யெல்லாம் தரக் குறைவாக விமர்சிக்கிறது என்றால் இதன் தன்மையைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?நூற்றாண்டு காணும் அறிஞர் அண்ணா இந்தப் பார்ப்பனர்களின் பாசாங்குத் தனத்தையும் பச்சோந்தித்தனத்தையும் பல நேரங்களில் பல முறைகளில் எடுத்துரைத்தது உண்டு - எழுதியதும் உண்டு.அதில் ஒரு முத்து: தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழியில் பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டப் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை.அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய, சமஸ்கிருதத்தின்மீதுதான் (திராவிடநாடு 2.11.1947)தமிழ் என்று வரும் இடத்தில் எல்லாம் தமிழர் என்றும் போட்டுக் கொள்ளலாம். இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான்.தமிழன் யார் என்ற வினாவுக்கு அண்ணா அவர்கள் அழகாகப் பதில் சொன்னார்: மொழியால் தமிழன் விழியால் தமிழன், வழியால் தமிழன், என்ற அழகான ஒரு அளவுகோலைக் கொடுத்தார்.இந்த மூன்றையும் உரை கல்லில் உரைத்துப் பார்த்தால் ஒரு பார்ப்பான்கூடத் தமிழனாகத் தேறமாட்டான்.ஈழத்திலே என்ன நடந்து கொண்டு இருக் கிறது? நீண்டகாலமாக தமிழர் அழிப்பு அங்கு நடந்து கொண்டு இருந்தாலும் - கடந்த கால் நூற்றாண்டாக அங்கு நடந்து வரும் இனப் படுகொலை (Genocide) உலக மாந்தர்களையே உலுக்கி எடுத்து விட்டது.தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று விளம்பரம் செய்தார்களே!உலகிலேயே பாதுகாப்பான இடம் சிறைச் சாலை என்பார்களே - அந்தச் சிறைச் சாலை யையே உடைத்து போராளிகளின் கண்களைக் குரூரமாகப் பிடுங்கி பூட்சு காலால் மிதித்து வெறியாட்டம் போட்டார்களா இல்லையா?தமிழர்களின் வீடு வீடாக நுழைந்து பாலியல் வன்கொடுமைக்கு தமிழச்சிகளை ஆளாக்கினார்களா இல்லையா?பச்சிளம் குழந்தைகள் தங்கி இருந்த விடுதியில்குண்டுகளைப் போட்டு அந்தக் குழந்தை மலர்களைக் கருக்கிய கல் நெஞ்சர்கள் யார்?மருத்துவமனையிலே குண்டு போட்டு, நோயாளிகள் என்று கூடப் பார்க்காமல் மரண ஊருக்கு அனுப்பி வைத்த அசல் காட்டுவிலங்காண்டிகள் யார்?தங்களுக்கான மரணக் குழிகளை - தாங்களே வெட்டிக் கொண்டு அந்தக் குழிக் குள்ளேயே தங்கள் உடலை உயிரோடு புதைத்துக் கொண்டு மூச்சுத் திணறி (இடம்: செம்மணி) சாக வேண்டிய அவலத்திற்கு தமிழர்களை ஆளாக்கிய கொலைகாரக் கூட்டம் எது?இவ்வளவும் நடக்கும் அரசு துணையோடு - சிங்கள வர்கள் அரங்கேற்றுவார்கள். தமிழன் கைகள்யெல்லாம் பூ பறித்துக் கொண்டு இருக்க வேண்டும்.தன் மகளோ, தாயோ, தாரமோ சிங்களக் காடையர் களால் தன் கண் முன்பே கற்பழிக்கப்படுவார்கள் - அதனைப் பார்த்துக் கொண்டு சோற்றாலடித்த பிண்டமாக இருக்க வேண்டும். அதனைத் தடுக்க ஆயுதம் ஏந்தக் கூடாது என்பவன் பார்ப்பானாக வேண்டுமானால் இருக்கலாம் - அவர்களுக்கும் மான உணர்வுக்கும் என்ன ஒட்டு உறவு?அய்வருக்குமே தேவி அழியாத பத்தினி என்று கூறி கோயில் கட்டிக் கும்பிடும் கூட்டமாயிற்றே!தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த தறுதலைக் கூட்டமாயிற்றே - அவனுக்கு மோட்சம் அளித்தான் தயா பரன் என்று கூசாமல் கூறும் கும்பலாயிற்றே!எங்கள் சிவன் யார் தெரியுமா? தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளைக் கற்ப ழித்த காருண்ய மூர்த்தி என்று கூசாது பெருமை பேசும் குழுவாயிற்றே!அவர்களுக்கு மானமாவது - மண்ணாங் கட்டியாவது!ஆனால் தமிழர் அத்தகையவர் அல்லரே!மானம் ஒன்றே நல் வாழ்வெனக் கொண்டுவாழ்ந்த என் மற வேந்தர்பூனைகள் அல்லர்புலிநிகர் தமிழ் மாந்தர் அல்லவாஅதனால்தான் புலி நிகர் தமிழ் மாந்தர்களான ஈழப் புலிகள் தாயைச் பழித்தவனின் - சிதைத்தவனின் தலையைக் கொய்யாமல் விட மாட்டேன் என்று வீரப் போர் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.அது வன்முறையா? வன்முறைக்கு எதிரானது வன்முறை என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.தற்காப்புக்காகப் போரிடுவதோ, அதுவும் தம் இன மக்களின் உரிமைகளுக்காகவும், மானத்திற்காகவும் போராடு வதையோ குறைத்துச் சொல்லுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் ஈனர்கள் அல்லாமல் வேறு என்ன?வேலை வாய்ப்புக்காகவும், பதவி உயர்வுக்காகவும், இடம் மாறுதலுக்காகவும் - பெரிய அதிகாரிகளிடம்... அனுப்பி வைத்துக் காரியம் சாதிக்கும் ஒரு கூட்டம்தாய் மானபங்கப்படுத்தப் படும்போது தாங்கொணா உணர்வுடன், உயிரைத் திரண மாக மதித்து, எதிரிகளை எதிர்த்து நிற்கும் மானமுள்ள தமிழர்களைக் கொச்சைப் படுத்தத்தான் செய்வார்கள்.ஒரு இனத்தின் மானத் துக்காக உரிமைக்காக அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது வன்முறையாம்.அதே நேரத்தில் சங்பரிவார்க் கும்பல் இன்னொரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்கும் அது வன்முறை இல்லையாம்! - அடேயப்பா அதற்கு எப்படியெல்லாம் இந்துவும் துக்ளக்க்கும் வக்காலத்து வாங்குகின்றன.கன்னிகாஸ்திரிகளை அந்தக் கா(லி)விக் கும்பல் கற்பழிக்கும் - அது காலித் தனம் அல்லவாம். கேட்டால் எதிர்வினையாம்!கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து மாலை யாகப் போட்டுக் கொண்டு வெறியாட்டம் போடும் சங்பரிவார் கூட்டம் - அது ஒன்றும் குற்றமில்லையாம்.பச்சிளங்குழந்தை என்றும் பாராது சிதறு காய் போல அந்தக் குழந்தையின் தலையை கருங்கல்லில் மோதி துடிக்கத் துடிக்க கொலை செய்வார்களாம். அந்தச் செய்தியின் பக்கம் அவர்களின் எழுத்தாணிகள் ஓடாதாம்!ஒரு மாநிலத்தில் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்குக் காரண மாக இருந்த ஒரு ஆள் - உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அழைக்கப் பட்ட ஒரு ஆசாமி, ஒரு மாநிலத்தில் முதலமைச்சராகயிருந்து சாதித்ததுபோதும் - சரி பாரத பூமியின் பிரதமராக வர வேண்டும் என்று வரிந்து வரிந்து எழுதுகிறார் வருணா சிரம வெறியரான திருவாளர் சோஇலங்கையிலே ஒரு பத்துப் பார்ப்பனர்கள் சிங்களவர்களால் சுடப்பட்டு இருந்தால் இப்படி யெல்லாம் சோ கூட்டம் எழுதுமா?அய்.நா. சபைக்கே பிரச்சினையைக் கொண்டு போய் ஆடித் தீர்த்திருக்க மாட்டார்களா?நரசிம்மராவ் வெளியுறவுத் துறை அமைச்சராகயிருந்த போது, இலங்கைக்குச் சென்றார்; அங்கு ஒரு பார்ப்பனக் குடும்பம் அவதிப்பட்டதாகக் கூறி - தான் வந்த விமானத்திலேயே இந்தியாவுக்கு அழைத்து வந்தார் என்பது பலருக்கும் மறந்திருக்கலாம்; ஆனால் கருப்புச் சட்டைக்காரர்கள் மறக்க மாட்டார்களே!சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம், பார்ப்பான் கொலை செய்தால் சிரைச் சேதம் (மயிர் மழித்தல்) என்கிற மனுதர்மப் புத்தி இந்த 2008-லும் இந்தப் பார்ப் பனர்களை விட்டுப் போக வில்லை என்பதற்கு அடையாளம்தான் இந்தவார துக்ளக் இதழ்.இதற்கு மேலும் என்ன எழுதித் தொலைப்பதோ!தமிழா இனவுணர்வு கொள்!தமிழா தமிழனாக இரு!தமிழர் தலைவரின் இந்த முழக்கங்கள்தான் நினைவிற்கு வருகிறது.

0 comments: