Wednesday, October 22, 2008
ஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள்
1. தான் கடைசியாக எழுதியது என்னவோ அதுவே தன் வாழ்நாளின் “மாஸ்டர் பீஸ்” என்று சொல்லிக்கொள்வார்கள்.2. பொது இடங்களில் சந்திக்க நேர்ந்தால் சந்தனத்துல என்னோட கட்டுரை வந்துருக்கு, தூர மலர்ல என்னோட கதை வந்திருக்கு, யோக்யாவில என்னோட தொடர் வரப்போவுது எனப் பெருங்குரலில் பேசி கலவரமூட்டுவார்கள்.3. வட்டார மொழியில் எழுதுகிறேன் பேர்வழி என்று எந்த வட்டாரத்திலும் இல்லாத ஒரு மொழியில் எழுதுவார்கள்.4. எப்போதும் ஏதாவது ஒரு பிரசுரத்தின் பெயரைச் சொல்லி அதற்காக ஒரு நூலை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்வார்கள்.5. ஒவ்வொரு பத்திரிகையின் தன்மைக்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்டு எழுதுவார்கள்.6. என்பதுகளில் காலாவதியாகிப் போய்விட்ட உத்திகளையும் நாடகத்தனமான உரையாடல்களையும் எழுதி விட்டு அதன்படியே எழுதி ரெமுனரேஷன் வாங்கும்படி சக எழுத்தானுக்கு யோசனை சொல்வார்கள்.7. கதை ஏதேனும் வார இதழ்களில் வர இருப்பதாகத் தெரிந்துவிட்டால் போஸ்ட்கார்டில் துவங்கி, எஸ்.எம்.எஸ், இமெயில், ஸ்க்ராப் என சகல வழிகளிலும் அதை மொத்த ஜனத்தொகைக்கும் தெரியப் ‘படுத்து’ வார்கள்.8. நண்பர்களின் வஞ்சகப் புகழ்ச்சியை உண்மையென்று நம்பித் தொலைப்பார்கள்.9. கதைகளிலும், சிந்தனையிலும் செய்ய வேண்டிய மாற்றத்தை தலைமுடியிலும், மோவாய்க்கட்டையிலும் அடிக்கடி மேற்கொண்டு கலவரப்படுத்துவார்கள்.10. வாசிப்பதைக் காட்டிலும் சுமார் நூறு மடங்கு அதிகமாக எழுதிக் குவிப்பார்கள் (யாரும் வாசிக்கத் தயாராக இல்லாத போதும்)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment