Tuesday, October 28, 2008
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம்!
எடை குறைப்பு மாத்திரைகளால் உயிருக்கு ஆபத்து
Sunday, October 26, 2008
கருணாநிதி இராஜினாமா வாபஸ்
இலங்கையில் கிளிநொச்சி பகுதியில் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் ஏராளமாக கொல்லப்படுகின்றனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து காடுகளில் தங்கியிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் இந்த நிலையை கண்டித்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த 14ந் தேதி தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்றும், தமிழர்கள் பாதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு இலங்கை பிரச்சனையில் தலையிட்டு, இரண்டு வார காலத்தில் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்வது என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பின்தேதியிட்டு தங்கள் இராஜினாமா கடிதங்களை கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியிடம் அளித்தனர். இதற்கிடையே, பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதியை தொடர்பு கொண்டு இலங்கை பிரச்சனையில் தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என அந்நாட்டு அரசுக்கு அறிவுறுத்தப்படும் என உறுதி அளித்திருந்தார். இதன்படி, கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்ட இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் தமிழர்கள் சிறிது அளவு கூட பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இலங்கை அரசிடம் கூடுதல் விவரங்களை இந்திய அரசு அப்போது கேட்டது. இதைத் தொடர்ந்து, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு உணவு, உடை, மருந்து பொருட்கள் அனுப்ப தடைவிதித்திருந்த இலங்கை அரசு, ஐநா சபையின் நிவாரண பொருட்களை கொண்டு சென்ற கப்பல்களுக்கு தடையை நீக்கியது. இதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்களும், மருந்து, உடை உள்ளிட்ட நிவாரண உதவிகளும் வினியோகிக்கப்பட்டன. இலங்கை நிலவரம் தொடர்பாக இந்திய அரசுக்கு விளக்கம் அளிப்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே தனது சகோதரரும், சிறப்பு பாதுகாப்பு ஆலோசகருமான பசில் ராஜபக்சேயை புதுடெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார். புதுடெல்லி வந்துள்ள பசில் ராஜபக்சே, அங்கு வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, அதிபர் ராஜபக்சே எழுதியுள்ள கடிதத்தை அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என அவர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு வழங்கும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை ஏற்றுக் கொள்ளவும் அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சண்டையால் இடம்பெயர்ந்த இரண்டரை இலட்சம் அகதிகளுக்கு, இருப்பிட வசதி செய்து கொடுக்க இலங்கை அரசு இசைவு தெரிவித்து உள்ளது என்றும், தமிழர்களின் நலனை பாதுகாக்க வாக்குறுதி அளித்துள்ளது என்றும், இந்த விவரங்களை பசில் ராஜபக்சே இந்திய அரசிடம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுக்களுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பசில் ராஜபக்சே, இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசு முன்னுரிமை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக கூட்டு அறிக்கை ஒன்று இன்று மாலை வெளியிடப்படும் என்றும், இது குறித்து மேலும் ஒரு சுற்று பேச்சு நடைபெறும் என்றும் அவர் கூறினார். முன்னதாக இலங்கை அதிபரின் தூதர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்து பேச்சுக்கள் நடத்தினார். இலங்கை தூதர் தன்னுடன் நடத்திய பேச்சுக்களின் விவரங்களை எடுத்துக் கூறுவதற்காக பிரணாப் முகர்ஜி இன்று மாலை சென்னைக்கு வருகிறார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் இன்று மாலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். இன்று மாலை 5 மணியளவில் மத்திய அமைச்சரும், தமிழக முதல்வரும் சந்திக்க இருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பையடுத்து, இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறி திமுக தனது எம்.பி.க்களின் இராஜினாமாவை விலக்கிக் கொள்ளும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முதல்வருடன் சோனியா பேச்சு இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கருணாநிதியிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கி உள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டு தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இன்று பகல் 12 மணியளவில் முதலமைச்சர் கருணாநிதியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது இலங்கை பிரச்சனை குறித்தும் தற்போதுள்ள சூழ்நிலைகள் குறித்தும் மத்திய அரசு எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சரிடம் கூறியதோடு, இன்று பிற்பகலில் மேலும் அது பற்றி விரிவாக பேசுவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அனுப்பவிருப்பதாகவும் தெரிவித்தார். சோனியாவுக்கும்,பிரதமருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், இலங்கை பிரச்சனையில் இந்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்காக தமிழ் மக்களின் சார்பில் தனது நன்றியை முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சோனியா-முகர்ஜியுடன் பாலு சந்திப்பு:முன்னதாக இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.வரும் 28ம் தேதிக்குள் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.இலங்கை குழுவிடம் முகர்ஜி பேச வேண்டிய விஷயங்கள் என்று கூறி முதல்வர் கருணாநிதி தெரிவித்த யோசனைகளையும் பாலு முன் வைத்ததாகத் தெரிகிறது.மேலும் இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தன்னிச்சையாக கருத்து தெரிவித்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் சோனியாவிடம் பாலு கோரியதாகத் தெரிகிறது.பின்னர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்த பாலு, இலங்கை விஷயத்தில் மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
Friday, October 24, 2008
அமெரிக்க டாலருக்கு விலைபோன குரங்குகள்!
உலக கண்ணழகி ஐஸ்!
இந்திய அழகின் பிரதிநிதியாக உலகமெங்கும் உலா வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராய்.
'இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து உலகமெங்கும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள இந்தியக் கலைஞர் இவர் மட்டும்தான்' என்கிறது ஆசியா வீக் பத்திரிகை. இவரது மாமனார் அமிதாப்புக்குக் கூட அடுத்த இடம்தான் (நடிப்பில் அல்ல... பாப்புலாரிட்டியில்!)
உலக அழகி பட்டம் பெற்ற பின்னர் திரையுலகில் நுழைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் கண்கள் தான் உலகிலேயே மிகவும் கவர்ச்சியான கண்கள் அறிவித்துள்ளது யுஎஸ் டிவி நிறுவனம்.
இந்த நிறுவனம் சமீபத்தில் உலகிலேயே கவர்ச்சியான உடல் பாகங்கள் கொண்டவர்கள் யார் என்று வாக்கெடுப்பினை நடத்தியது.
இதில் பார்ப்பவர்களை வசீகரிக்கும் கவர்ச்சியான கண்களைக் கொண்டவர் என்ற பிரிவில் ஐஸ்வர்யா ராய் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, மேகன் பாக்ஸ், ஸ்கார்லெட் ஜோகன்சன் ஆகியோரது கண்களை விட கவர்ச்சியாக உள்ளது ஐஸ்வர்யாவின் என்று பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
கவர்ச்சியான கால்களுக்குச் சொந்தக்காரர் என்ற பட்டத்தை பிரேசில் நாட்டின் மாடல் அழகி கிசிலி பண்ட்சென்னுக்கு அளித்துள்ளனர் இந்த டிவியின் பார்வையாளர்கள்.
தைவான் நாட்டின் ஷூ கி, ஏஞ்சலினா ஜூலியை விட கவர்ச்சியான உதட்டுகளைக் கொண்டவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சாதித்தார் சச்சின்
கிரிக்கட்உலகின்சாதனைகள் பலவற்றின் சொந்தக்காரர் சச்சின். சச்சின் என்றால் கிரிக்கட் வீரர் என்பதனை விட சாதனைகளின் சொந்தக்கார் என்றும் கூறலாம். கிரிக்கட் உலகின் பிதா மகன் டொன் பிரட்மன் பாராட்டிய வீரர்களில் சச்சினும் ஒருவர்.
உலகின் பிரபலமான பந்து வீச்சாளர்கள் அனைவரும் சச்சினுக்கு பந்து வீசுவது கடினம் என்று ஒரே குரவில் உரத்துக் கூறியுள்ளனர். ரன் குவிக்கும் மிஷின் என்று புகழ்ந்து பேசப்படும் சச்சினின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது சாதனைகளைத் தொடுவது அவருக்கு கைவந்த கலை.
துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் சச்சின் பந்து வீச்சிலும் எதிரணியின் வெற்றியை தட்டிப் பறித்தார். எதிர்பாராத வேளையில் எதிரணி வீரர்களின் முக்கியமான விக்கட்டை சச்சின் வீழ்த்தியதால் வெற்றி பெற வேண்டிய அணிகள் தோல்வியடைந்தன.
வாய்ச் சவாடல் பேசி தனது வீரத்தை சச்சின் காட்டியதில்லை. தன் மீது வீசப்படும் விமர்சனக் கணைகளை துடுப்பு மூலம் தடுத்து விடுவது அவரது பாணி. டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த லாராவின் ஓட்ட எண்ணிக்கையை இலங்கையில் சச்சின் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் எவரும் சோபிக்கவில்லை. சச்சினும் அதற்கு விதிவிலக்கல்ல. சச்சினின் உடல் நிலை அவருக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. விளையாடுவதற்குரிய உடல் நிலை இல்லாமையினால் போட்டிகளைத் தவிர்த்து வருகிறார்.
எதிரணி வீரரால் அதிகம் குறி வைக்கப்படும் வீரராக சச்சின் உள்ளார். சச்சினுக்கு எப்படிப் பந்து வீசினால் அவர் அவுட்டாவார் என்று தெரிந்து வைத்திருக்கும் பந்து வீச்சாளர்கள் அவரைக் குறி வைத்து பயிற்சி செய்வார்கள். பந்து வீச்சாளர்களின் எதிர்பார்ப்பை பல சந்தர்ப்பங்களில் சச்சின் தவிடு பொடியாக்கியுள்ளார்.
சச்சினின் விக்கட்டை வீழ்த்தினால் உலக சாதனை செய்தது போல் பந்து வீச்சாளர்கள் துள்ளிக் குதிப்பார்கள்.
அணியில் அறிமுகமாகும் புதிய பந்து வீச்சாளர்களுக்கு சச்சின் மீது ஒருதலைக் காதல் பிறந்து விடுகிறது. சச்சினின் விக்கட்டை வீழ்த்த வேண்டும் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளிப்பார்கள். அவர்களின் பந்து வீச்சு சச்சின் வீழ்ந்தால் பிறவிப் பயனடைந்தது போல் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.
லாராவின் சாதனையை முறியடித்து 12 ஆயிரம் ஓட்டங்களை கடந்து விட்டார் சச்சின். அவரது சாதனையை முறியடிக்கும் சந்தர்ப்பம் டிராவிட், பொண்டிங் ஆகிய இரண்டு வீரர்களுக்கு உள்ளது. டிராவிட் தொடர்ந்து விளையாடுவாõர என்ற சந்தேகம் உள்ளது. சச்சினின் சாதனையை முறியடிக்கும் வரை பொண்டிங் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆபிரிக்க வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது ஓய்வை அறிவித்து விடுவார்கள். அவர்களின் ஆட்டத்திறன் மங்கிவிட்டால் அணியில் இருந்து தூக்கியெறிப்படுவார்கள். 2011 ஆம் ஆண்டுவரை விளையாடப் போவதாக சச்சின் அறிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டுவரை டெஸ்ட் பேட்டிகளிலும் சச்சின் விளையாடினால் அவரின் சாதனையை இப்போதைக்கு யாராலும் முறியடிக்க முடியாது.
வானதி
நன்றி:மெட்ரோ
சீமான், அமீர் கைதை கண்டித்து நாளை திரைப்படங்கள் அனைத்தும் ரத்து (ஓடியோ செய்தி இணைப்பு)
மூடப்படவுள்ளதாகவும், திரைப்படக்காட்சிகள் அணைத்தும் ரத்தாகும் எனவும் அறியமுடிகிறது! நாளை காலை 9 மணியளவில், avm studio விற்கு முன்னால் திரையுலகக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தப்போவதாகவும் தெரிவிக்கப்ப்டுகிறது இது குறித்து, இயக்குனர் சீமான், கைதாகிய தருணத்தில் அங்கிருந்த எமது நிருபர் வழங்கிய சிறப்புச்செவ்வி!
http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த சௌரவ் கங்குலி களத்தில் நிற்கும் வரை எதிரணி வீரர்களும், ரசிகர்களும் பதற்றமாக இருப்பார்கள். ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஒருசில வீரர்களில் கங்குலியும் ஒருவர். மகிழ்ச்சியுடன் விடைபெற வேண்டிய கங்குலி மனமொடிந்து விடை பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றபோது கங்குலி அணியில் சேர்க்கப்பட்டார். டெஸ்ட் போட்டியில் விளையாடிய 11 வீரர்களின் பெயர்ப்பட்டியலில் கங்குலி இடம்பெறவில்லை. இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நவ்ஜோத் சித்து அணியின் நிர்வாகிகளுடன் பிரச்சினைப்பட்டதன் காரணமாக இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிவிட்டார்.
சித்துவின் இடத்தை நிரப்பக்கூடிய வீரர் இந்திய அணியில் இல்லை என்றாலும் தேர்வாளர்கள் கங்குலியைக் களமிறக்கினார்கள். தேர்வாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திய கங்குலி 131 ஓட்டங்கள் அடித்து இந்திய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.
சச்சினும், கங்குலியும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி டெஸ்ட்டிலும், ஒருநாள் போட்டியிலும் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். கங்குலியின் திறமை காரணமாக இந்திய அணியின் தலைமைப்பதவி தேடி வந்தது. இந்திய அணியின் தூண்களில் ஒருவராக இருந்த கங்குலிக்கு இந்திய அணியின் பயிற்சியாளரான செப்பலின் உருவில் பிரச்சினை ஆரம்பமானது.
கங்குலியை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் பயிற்சியாளர் செப்பல் குறியாக இருந்தார். கங்குலியின் திறமையாலும் அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்காலும் கங்குலியை அசைக்க முடியவில்லை.
கங்குலியின் திறமையும் அரசியல் செல்வாக்கும் சரியத் தொடங்கியதும் கங்குலிக்கு சோதனை ஏற்பட்டது. வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக்குழு ஒருநாள் அணியில் இருந்து கங்குலியை வெளியேற்றியபோது கங்குலிக்கு அணியில் இனி இடமில்லை என்று வெளி உலகுக்குத் தெரிந்தது.
சற்றும் தளராத விக்கிரமாதித்தன்போன்று உள்ளூர்ப்போட்டிகளில் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்திய கங்குலி தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பினார். ஷேவாக், சுரேஷ் ரெய்னா, கௌதம் கம்பீர் ஆகியோரின் அதிரடியினால் கங்குலியின் இடம் பறிபோனது.
இளம் வீரர்களின் அதிரடி ஆட்டத்தினால் கங்குலியுடன் ட்ராவிட், லக்ஷ்மன் ஆகியோரும் பாதிக்கப்பட்டனர். ஒரு நாள் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட இவர்கள் டெஸ்ட்போட்டிகளில் மட்டும் விளையாட அனுமதிக்கப்பட்டனர்
டெஸ்ட்போட்டிகளிலும் இவர்கள் மூவரும் சோபிக்காததனால் திறமையுள்ள இளம் வீரர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் அண்மைக்காலப் போட்டிகளில் அதிகம் சோபிக்கவில்லை. காயம் ஏற்படுவதாலும் உடல் தகுதி இல்லாததாலும் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
புதிய தேர்வுக்குழு பதவி ஏற்றதும் டெஸ்ட்போட்டியில் விளையாட தனக்கு இடம் கிடைக்கும் என்று கங்குலி உறுதிப்படக்கூறினார். கங்குலி, ட்ராவிட், லக்ஷ்மன் ஆகியோருக்கு டெஸ்ட்போட்டிகளில் சந்தர்ப்பம் வருமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஒரு பக்கத்தில் நடைபெற்றது. இவர்கள் மூவருக்கும் தேர்வுக்குழு சந்தர்ப்பம் வழங்கும். அதேவேளை கௌரவமான முறையில் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு வழிவிடப்படும் என்ற கருத்தும் நிலவியது.
ரமணி
நன்றி:மெட்ரோ
எதிர்பார்த்தது போன்றே கங்குலி, ட்ராவிட், லஷ்மன் ஆகியேõருக்கு டெஸ்ட் அணியில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. டெஸ்ட்போட்டி ஆரம்பமாவதுற்கு முன்னரே அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறப்போவதாக கங்குலி அறிவித்துவிட்டார்.
கங்குலியைப்பற்றிய காட்டூன்களும், நகைச்சுவைத் துணுக்குகளும் மிக அதிகமாக வெளிவந்தன. நகைச்சுவை என்ற பெயரில் கங்குலி நோகடிக்கப்பட்டார்.இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவரான ஸ்ரீகாந்தும், அன்றைய தேர்வுக்குழுவால் ஓரங்கட்டப்பட்டவர் தான். இந்திய அணித்தலைவராக நீண்டகாலம் பணியாற்ற வேண்டிய அவர் தேர்வாளர்களின் ஒருதலைப்பட்சத்தால் ஓய்வு பெற்றார். ஆகையினால் வீரர்களின் ஆதங்கம் அவருக்கு நன்கு புரியும்.
கங்குலி தனது ஓய்வை அறிவித்துவிட்டார். அடுத்து ஓய்வு பெறப்போவது யார்? லக்ஷ்மனா? ட்ராவிட்டா? என்ற கேள்வி ரசிகர்களின் முன்னால் உள்ளது. இதற்கிடையில் கும்ப்ளே ஓய்வு பெறப்போவதாக செய்தி வெளியானது. இதனை அவர் மறுத்துள்ளார். 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாடப்போவதாக டெண்டுல்கர் கூறியுள்ளார்.
கங்குலி, ட்ராவிட், லக்ஷ்மன், குப்ளே ஆகியோர் ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி உள்ளனர்.
ரமணி
நன்றி:மெட்ரோ
வைகோவைத் தொடர்ந்து சீமான், அமீரும் கைது
Wednesday, October 22, 2008
சாமந்திப் பூ டீ குடித்தால் நீரிழிவு நோய் பாதிக்காது
ஆண்களில் வழுக்கைக்கு அம்மாக்களா காரணம்..?!
செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு உருவாவதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் செல்லிடத் தொலைபேசிகளின் வெளிப்புற கவசம் மற்றும் பொத்தான்களில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படாத செல்லிடத் தொலைபேசிகளைப் பாவிப்பதால் இப்பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.பொதுவாக பெண்கள் மத்தியில் நிக்கல் உலோக ஒவ்வாமையின் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. காரணம் அவர்கள் அணியும் ஆடம்பர ஆபரணங்களிலும் நிக்கல் படலமிடப்பட்டிருப்பதே ஆகும்.
மாத்திரைகளால் மூளைச் செயற்பாட்டை ஊக்குவிக்கலாம்.
ஏரோ டைனமிக் கார்
இந்த காரின் சேசிஸ், அதிக திறன் கொண்ட அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. ஏர் கூல் இன்ஜினுடன் பைபர் கிளாஸ் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 600 கிராம் எடை கொண்டவை. காரின் மொத்த எடை 55 கிலோ. ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய இந்த கார், 10 அடி நீளமும், 2.5 அடி அகலமும் கொண்டது. இந்த காரில் டி.வி.எஸ்., கார்பரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. எளிதில் கையாளப்படும் இலகு பிரேக்குகள் இதன் சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. பெங்களூரு என்.ஐ.சி.இ., காரிடாரில் இந்த கார் இயக்கி சோதிக்கப்பட்ட போது, ஒரு லிட்டருக்கு 180 கி.மீ., மைலேஜ் கிடைத்தது.
இந்த காரின் இன்ஜின் வடிவமைப்பு, வர்த்தக ரீதியிலும் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. காரை வடிவமைத்த குழுவின் தலைவர் நிஷாந்த் சராவ்கத், ஒரு லிட்டருக்கு 500 கி.மீ., ஓடும் காரை வடிவமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு, 5.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள்
Monday, October 20, 2008
“துக்ளக்” சோ ராமசாமி ஆலகால விஷத்தை அப்படியே கக்கி இருக்கிறார்.
‘கொல்வேன்’ என்று மிரட்டும் ஸ்ரீரங்கத்து அய்யங்காரும் கொல்லாமல் தடுக்கக் கோருவோரைச் சாடும் சென்னை அய்யங்காரும்!
நன்றி: "முரசொலி" இணையதளம்
உண்ணாவிரதம்: எதற்குக் கூப்பிடுகிறீர்கள் ரஜினியை?
ஈழத் தமிழர் ஆதரவு எனும் உணர்ச்சிப் பூர்வமான போராட்டத்துக்கு திரையுலகினர் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் மட்டும் இந்தக் கேள்வி எழாமல் இருக்குமா?இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் என்ற குரல் எழத் தொடங்கிய உடனே இந்தக் கேள்வியும் மீடியாக்களால் உருவாக்கப்பட்டுவிட்டது.
ரஜினியை இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவராகச் சித்தரிக்க ஒரு கூட்டமே முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் ரஜினியின் நிலைப்பாடு தெளிவானது.
‘இலங்கையில் அவதிபடும் தமிழர்களுக்கு விரைவில் நிரந்தர அமைதி கிடைக்க வேண்டும். இலங்கையில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதே என் விருப்பம்…’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்ததை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அவரது இந்த பேட்டிக்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்துவிட்டன. இடையில் இலங்கைத் தமிழர் ஆதரவு என்று பேசினாலே பொடா பாயுமளவுக்கு மோசமான நிலையிருந்தது.இப்போதுதான் திடீரென்று மீண்டும் ஈழத்து மக்களுக்கான ஆதரவு பெருமளவு திரளத் தொடங்கியிருக்கிறது.
இப்போது இந்த பேராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள ரஜினி, உண்ணாவிரதத்தில் பங்கேற்கப்போவதாகவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களுக்கு ரஜினியை அழைப்பதெல்லாம் சரிதான்.அங்கே ரஜினியைப் பார்த்த பிறகுதான் இவர்களின் தமிழுணர்வு பீறிட்டுக் கிளம்பும். வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறத் தொடங்குவார்கள்.
அவரும் ஒரு தமிழர் என்று சொல்லித்தானே அழைக்கிறார்கள்… அவர் மேடைக்கு வந்ததும் எழும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பான வரவேற்பையும் கைத்தட்டலையும் பார்த்த பிறகுதான் இவர்களுக்கு, அடடா இவர் பக்கத்து மாநிலத்துக்காரராச்சே, இவ்வளவு தமிழர்களுடைய ஆதரவும் இவருக்கு மட்டுமேவா… என்ற பொறாமை எட்டிப் பார்க்கும்.
அப்போதே விஷமத்தனத்தை ஆரம்பித்துவிடுவார்கள். மேடை நாகரீகமாவது, மண்ணாவது… பேயாட்டம்தான்!
அப்படியெல்லாம் இந்த முறை நடக்காமல் பார்த்துக் கொண்டால்தான் இந்த உண்ணாவிரதத்துக்கு மரியாதை.
காரணம் ரஜினிக்கு நேரும் அவமானம், ஈழத் தமிழனுக்கு ஆதரவு தரும் ஒவ்வொரு தமிழனுக்கும் நேரும் அவமானமாகவே கருதப்படும்!
ரஜினியை உயர்த்தி வைத்துப் பார்க்க இப்படி எழுதவில்லை. அவரது உயரம் உலகமறிந்தது.ரஜினியை எதற்கு இந்த மாதிரி போராட்டத்துக்கு அழைக்கிறார்கள்… ரஜினி வந்து பேசினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றா… இல்லை. உலகத்தின் கவன ஈர்ப்பைப் பெறுவதற்காகத்தான்.
ஆனால் நடப்பது என்ன?
இவர்ள் அழைப்பை பெரிதாய் மதித்து ரஜினி வருவார்… மேடையில் உள்ள துண்டு துக்கடாவுக்குக் கூட மரியாதை செலுத்துவார் (அது அவர் பண்பு!)… உலகின் கவனமே அவர் பக்கம் திரும்பும். அவ்வளவுதான்… இங்குள்ள சத்யராஜுக்கும், சரத்குமாருக்கும், இவர்களுக்கும் கீழ் மட்டத்திலுள்ள நடிகர்களுக்கும் அடிவயிறு பற்றிக் கொண்டு எரியும் பொறாமையில்.
ரஜினியை இவர்கள் வருந்தி வருந்தி அழைக்கும் ஒவ்வொரு போராட்டமும் இப்படித்தான் முடிந்திருக்கிறது.
இந்த முறை ஈழத் தமிழனுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டும் முன் உங்கள் மனதிலுள்ள பொறாமை அழுக்கை கழுவிவிட்டு ஒன்றுபடுங்கள்… உங்கள் குரல் தூர்ந்து கிடக்கும் உலகின் செவிகளைக் கிழிக்கும்!
இயக்குநர்களின் இயக்குநர் ஸ்ரீதர்!
சிறிலங்கா படையினரின் ஆறுமுனை முன்நகர்வுகள் புலிகளால் முறியடிப்பு
கடந்த வெள்ளிக்கிழமை (17.10.08) தொடக்கம் இன்று திங்கட்கிழமை காலை வரை சிறிலங்கா படையினரின் ஆறுமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.
வான்படையின் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகள், கிபீர், மிக்-27 ரக வானூர்திகள், வெடிகணை, ஆட்டிலறி எறிகணை, இலகு மற்றும் கனரக ஆயுதங்களின் செறிவான சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கண்ணிவெடிகள், பொறிவெடி வயல்களை உருவாக்கி கொலை வலயங்களுக்குள் எதிரிகளை இழுத்து பெரும் தொகையில் கொன்றொழிக்கும் நடவடிக்கையில் பெருவெற்றி கண்டுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் படைத்தரப்புக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இதுவரை இடம்பெற்ற மோதல்களில் 12 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும் களமுனை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனிடையே தமது தரப்பில் 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மூவரைக் காணவில்லை என்றும் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியிலிருந்து தென்மேற்கு திசையில் அக்காரயன் 15 கிலோமீற்றர் தொலைவிலும் நாச்சிக்குடா 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈழப்பிரச்சினை அடுத்து என்ன?
"விடுதலை" தலையங்கம் 20-10-2008
ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் மத்திய அரசை தாக்கிப் பேசிய இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீருக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும் அப்பாவி தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டு தரும் சக்தி மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. வாய் சவடால் பேசுவோருக்கு அந்த தகுதி இல்லை என்று கண்டித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஈழத் தமிழர்கள் பிரச்சினை தீர்வுகாக இந்திரா காந்தி காலத்தில் தொடங்கி ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலும் எடுத்த முயற்சிகள் ஏராளம்.தலைவர் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை தமிழர் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி முனைந்து செயல்பட்ட நேரத்தில் தமிழின துரோகிகளால் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.மாபெரும் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அக்கொலை பாதகர்களை, அவர்களுக்கு துணை போகிற இயக்கத்தை (விடுதலை புலிகளை) அக்கொலையை நியாயப்படுத்துகிற கொடுமையாளர்களை மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது.சோனியா வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக இலங்கை தமிழர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.தமிழ்நாட்டில் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளை ஆதரித்தும், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் பல்வேறு நிலைகளை எடுப்பவர்களை தமிழ் இனம் மட்டுமல்ல எந்த ஒரு சமூகமும் அங்கீகரிக்காது.இலங்கை பிரச்சனையில் மத்திய அரசும், பிரதமர் மன்மோகன்சிங்கும் எடுத்து வரும் நடவடிக்கைகள் நம்பிக்கை ஊட்டுவதாகவும், அதை வரவேற்பதாகவும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.நேற்று ராமேஸ்வரத்தில் திரை உலகத்தினரால் நடத்தப்பட்ட பேரணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் அமீர் போன்றவர்கள் தமிழினத்தை காக்கின்ற மத்திய அரசையும், இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாகவே இருந்து பல்வேறு நடவடிக்கைகளை தங்கள் காலத்தில் செயல்படுத்திய இந்திரா காந்தியையும் ராஜீவ் காந்தியையும், அவரது படுகொலையை கொச்சைப்படுத்தியும், நியாயம் கற்பித்தும் பேசியதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.வன்முறைப் பேச்சை, தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழின உணர்வாளர்களின் கடமையாகும்.அப்பாவி தமிழ் மக்களின் வாழ்வுரிமையைப் பெற்றுத் தரும் சக்தி இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. வெறும் வாய்ச் சவடால் பேசுவோருக்கு அந்த தகுதியும் உரிமையும் கிடையாது. அவர்களால் தமிழர்களை காப்பாற்றவும் முடியாது.இந்த நிலையில் இந்திய அரசையும், அதன் நடவடிக்கைகளையும் குறை கூற யாருக்கும் அருகதை இல்லை என்று கூறியுள்ளார்.
Sunday, October 19, 2008
அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி அடுத்த ஆண்டிலேயே!:
"புதினம்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை 1984 ஆம் ஆண்டு இந்திய சஞ்சிகை ஒன்றுக்காக முதன் முதலாக செவ்வி கண்டவர் அனிதா பிரதாப். இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் தனது பணியை மேற்கொண்டிருந்த அனிதா பிரதாப், இலங்கையில் தனது ஊடகவியல் அனுபவம் தொடர்பில் "இரத்தத்தீவு" என்ற நூலை எழுதியிருந்தார்.இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் பலவற்றில் பணியாற்றிய அனிதா பிரதாப், 1999 ஆம் ஆண்டுவரை சி.என்.என். தொலைக்காட்சியின் தெற்காசியப் பிரிவின் செய்திப் பணிப்பாளராக கடமையாற்றினார்.பேட்டியின் முழுவிவரம் வருமாறு:இலங்கையில் பரவலடைந்துள்ள வன்முறைகளின் முடிவு எங்கே என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?இலங்கையில் இன வன்முறை என்பது கொடிய வளைவுகளாக அதிகரித்துக்கொண்டே உள்ளன. ஒருகாலத்தில் வன்முறைகள் உச்சக்கட்டத்தில் காணப்படும். பின்னர், குறையும். பிறகு, மீண்டும் அதிகரிக்கும். இவை உடனடியாக முடிவுக்கு வரும் என்று எனக்குத் தெரியவில்லை. தற்போதுள்ள நிலையில் மாற்றம் ஏற்படுமானால், இன்னும் அதிகரிக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.தற்போது தனக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சிறிலங்கா அரசு கருதுகின்றது. அதனால், அது தனது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் நாட்டமாகவுள்ளது.விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக பலமிழக்கச்செய்வதன் மூலம் அவர்களை பேச்சு மேசைக்கு கொண்டு வரலாம் என்று சிறிலங்கா அரசு எண்ணுகிறது என்று நான் நினைக்கின்றேன். கடந்த அரசுகளும் இதேபோன்றுதான் செயற்பட்டன. ஆனால், அவர்கள் நினைத்தது போன்று நடக்கவில்லை.
"என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்."
அரசு இதனை மறுத்திருக்கின்றது. ஆனால், அது உண்மை என்றால், அரச தலைவரின் உலங்குவானூர்தி அணி மீதான தாக்குதல் பாரதூரமான விடயம். இந்த தாக்குதலானது, சிறிலங்கா அரசின் "இதயம்" வரை அண்மித்து தாக்குதல் நடத்தக்கூடிய சக்தியை விடுதலைப் புலிகள் கொண்டுள்ளார்கள் என்பதை காட்டியுள்ளது.புலிகளின் இவ்வாறான தாக்குதல்களுக்கு பதிலளிப்பதானால், அவர்களை முறியடிக்கும் முயற்சியில் அரசு இன்னமும் கூடுதலாக செயற்பட வேண்டியிருக்கின்றது.ஆனால், அவ்வாறான அரசின் பதில் நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால்- மக்கள் ஆதரவின் மூலம்- விடுதலைப் புலிகள் மட்டுமே பலம் பெற்றுக்கொள்வார்கள்.இலங்கையில் நிலவும் தற்போதைய இராணுவ நிலைமை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமிழந்து விட்டார்கள் என்று கருதுகின்றீர்களா?ஆம். விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற கருத்துநிலை ஒன்று உள்ளது.ஆனால், கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால், நிகழ்காலம் தமக்கு பாதகமாக அமையும்போதெல்லாம் புலிகள் தமது நடவடிக்கைகளை 'அடக்கி வாசித்துள்ளார்கள்'.ஆனால், அக்காலப்பகுதியில் அவர்கள் சோம்பல் முறித்துக்கொண்டோ- நேரத்தை வீணடித்துக்கொண்டோ இருப்பதில்லை.அந்தவகையில், அவர்கள் தற்போது பெரும் தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு தம்மை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கின்றார்கள். மீண்டும் எழுந்துவர தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.பிரபாகரன் பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை. அவரது மூளை ஏதாவது ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்.விடுதலைப் புலிகள் இயக்கம் மிகச்சிறந்ததொரு கெரில்லா அமைப்பு.ஆனால், நாட்டின் வலிமை குறையும் நேரங்களில், விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாக மாறி சமரிட்டார்கள்.இந்த வழியை 1990 களின் ஆரம்பப் பகுதிகளில் முயற்சித்த பிரபாகரன், இதனைத் தொடரமுடியாது என்பதை உணர்ந்துகொண்டார். புலிகளிடம் உள்ள வளங்களைப் பொறுத்தவரை இது மிகவும் விலை மதிப்பானது என்பதையும் விளங்கிக்கொண்டார்.இராணுவம் எல்லா இடங்களிலும் ஏககாலத்தில் காணப்படும்போது புலிகள் ஒரு கெரில்லா அமைப்பாக இருந்து, தமது நேரத்தை நடவடிக்கைகளை மீளத்திட்டமிடுவதிலும் தம்மை மீள ஒருங்கமைத்துக்கொள்வதிலும் செலவிடுகின்றார்கள்.இதனை இராணுவ வெற்றியாக அரசு கருதுவது பாரதூரமான பிழையாகும்.வானின் நீலத்தை கிழித்துக்கொண்டு வரும் மின்னல் போன்று சுருக்கமாகவும் கூர்மையாகவும் தமது தாக்குதல்களை நடத்துவதில் விடுதலைப் புலிகள் வல்லவர்கள்.ஆகவே, புலிகளை அடிமட்ட நிலைக்கு கொண்டுவந்துவிட்டோம் என்று அரசு பிழையான முடிவுக்கு வருவது சரி என்று எனக்குப்படவில்லை.விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படும் தற்போதைய போரில் சிறிலங்கா அரசு தனது இலக்கை அடைந்துவிட்டதாக நீங்கள் கருதுகின்றீர்களா?அரசாங்கம் என்பது போர் தொடர்பாகவே சிந்திக்கக்கூடாது. போரை நான் வெறுக்கின்றேன். போருக்கு ஆதரவளிக்க என்னால் முடியாது. தனது நாட்டு மக்களுக்கு எதிராக ஒரு போரை நடத்துவது தொடர்பாக எந்த ஒரு அரசும் சிந்திக்கவே கூடாது.ஆனால், இலங்கையில் அது நடைபெறுகின்றது. அரசு, தனது எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் தனது சொந்த மக்களுக்கு எதிரான- கீழ்த்தரமான- ஒரு போரை நடத்திவருகின்றது.
"இன்றைய உலகில் முழுமையான ஒழுக்கத்துடனும் தனது தலைமைக்கு விசுவாசமாகவும் ஒரு விடுதலை அமைப்பு உள்ளதென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றேதான்."
நான் அரசாங்கத்தில் இல்லை. அப்படி இருந்திருந்தால், போரை நடத்துவதற்கான கட்டாய நிலைக்கு நான் தள்ளப்பட்டால், அமைதியை கொண்டுவருவதற்கான பேச்சுக்களுக்கு ஒரு கருவியாகவே போரை- கடைசி தெரிவாக- பயன்படுத்தியிருப்பேன்.அமைதியும் சுபீட்சமும்தான் எந்த அரசினதும் இலக்காக இருக்கமுடியும். போர் என்பதன் அர்த்தம் முடிவு. போர் எனப்படுவது ஒரு நாட்டின் அமைதிக்கும் சுபீட்சத்துக்கும் உறுதி நிலைக்குமான முடிவாகவே இருக்கமுடியும்.இலங்கையைப் பொறுத்தவரை போர்தான் போருக்கு முடிவாக இருக்கமுடியும் போல தெரிகின்றது. பல தனிநபர்களினதும் குழுக்களினதும் விருப்பத்துக்கு அமையவே போர் தொடரப்படுகின்றது.அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதிர்காலத்தில் உடனடிப் பேச்சுக்கள் ஆரம்பமாகும் சாத்தியங்கள் உள்ளனவா?நிச்சயமாக நடைபெறும். ஆனால், இந்த வருடம் அல்ல. தமது அதிகாரத்தை இழந்துகொண்டிருக்கும் தலைவர்களைக்கொண்ட இரண்டு நாடுகள் இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதை பலர் உணரவில்லை. ஆம். இந்தியாவும் அமெரிக்காவும்தான் அவை.இந்த ஆண்டுடன் அமெரிக்காவில் புஷ் பதவி இழக்கின்றார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுடன் புதிய அரசியல் முன்னணி ஆட்சிக்கு வரவுள்ளது.ஆகவே, இன்னும் ஒரு வருடத்துக்குள் சிறிலங்காவில் அமைதிப்பேச்சு எதுவும் நடைபெறப்போவதில்லை. தற்போது ஏற்பட்டிருப்பது ஒரு வெற்றிடமான காலப்பகுதி.சிறிலங்கா அரசு, வேகமாகவும் உக்கிரமாகவும் போரில் இறங்கியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். முக்கியமாக, வரப்போகும் மழை காலத்துக்குப் பின்னர் போரை மேலும் தீவிரப்படுத்தும்.தற்போதைய சூழ்நிலையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?இலங்கைப் பிரச்சினை தொடர்பில் இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது. இந்திய அமைதிப்படை விவகாரத்துக்குப் பின்னர் இலங்கையில் நேரடியான இராணுவத் தலையீட்டை மேற்கொள்ள இந்தியா தீவிரமாக இல்லை.ஆனால், பிராந்தியம், பாதுகாப்பு, உபகண்ட உறுதிநிலை ஆகியவை தொடர்பிலேயே இந்தியா, இலங்கை விவகாரத்தில் மிகவும் தீவிரமாகவுள்ளது.ஆனால், இலங்கையில் அமைதிப்பேச்சுக்களுக்கு அனுசரணை வழங்குமளவுக்கு இந்தியாவில் தற்போது ஆட்சியில் உள்ள அரசுக்கு விருப்பமோ நேரமோ இல்லை.அதற்காக, இந்தியா முற்றுமுழுதாக இலங்கை விவகாரத்திலிருந்து விலகி விட்டதாக அது அர்த்தமாகிவிடாது. இலங்கையை முழுமையாக போர் சூழ்ந்தநிலை இருக்கக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கின்றது. அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்மட்டக்குழுவினரின் திடீர்ப் பயணம், அதன்பின்னர் வெளியான இந்தியாவின் இராணுவ உதவி குறித்தான செய்தி ஆகியவை தொடர்பான உங்கள் கருத்து என்ன?நான் மேற்கூறிய காரணங்களே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். உயர்மட்டக்குழுவினரின் இந்த வருகை வழமையாக நடைபெறுகின்றதொரு பயணமோ அல்லது பொதுமக்கள் தொடர்பான பயணமோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.இந்திய அரசானது அரசியல் குழப்பநிலைக்குள் சிக்கி, தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தை இழந்து செல்லவேண்டிய நிலையில் தேர்தலை எதிர்நோக்கி வங்குரோத்தான நிலையில் உள்ளது என்ற கணிப்பீடு சிங்கள அதிகாரப்பீடத்தின் மத்தியில் உள்ளது என்பது இந்திய அரசுக்கு தெரியும்.இந்தியாவின் இந்த நிலை சிங்கள ஆட்சிப்பீடத்தின் ஒரு பகுதியினருக்கும் பல 'கண்டுபிடிப்புக்களுக்கு' வித்திட்டிருக்கின்றது. இந்த கண்டுபிடிப்புக்களுக்கு எதிரான- கடுமையான- தனது எச்சரிக்கையை விடுப்பதற்கே இந்திய உயர்மட்டக்குழு அண்மையில் கொழும்புக்கு சென்றிருந்தது.விடுதலைப் புலிகளினதோ சிறிலங்கா அரசினதோ ஆதிக்கநிலையை இந்தியா விரும்பவில்லை.வெகுதூரத்திலுள்ள அமைதி உடன்பாட்டால் இலங்கையில் அமைதிக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில், வரையறைக்குட்பட்ட வன்முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அரசும் புலிகளும் சமபலத்தை பேணிக்கொள்ளட்டும். நிலைமை கைமீறிப்போகுமளவுக்கு பாரிய போர் ஏற்பட்டுவிடக்கூடாது.இதுவே இந்தியாவின் பாதுகாப்புத்தரப்பினதும் வெளிவிவகாரத் தரப்பினதும் இலங்கை தொடர்பான பார்வையும் எதிர்பார்ப்பும் ஆகும்.
"பிரபாகரன் பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை. அவரது மூளை ஏதாவது ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்."
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான மேற்கு நாடுகளின் பார்வையில் கொள்கை மாற்றங்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளனவா? கனடாவிலும் இத்தாலியிலும் அண்மையில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், இது தொடர்பில் உங்கள் விளக்கம் என்ன?புஷ் ஆரம்பித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரினால், சுதந்திரத்துக்காகப் போராடும் அமைப்புக்கள் உட்பட அனைத்து குழுக்களும் பயங்கரவாத அமைப்புக்கள் என்ற பெயருக்குள் அடக்கப்பட்ட மிகப்பெரிய தவறு இடம்பெற்றிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்றிருக்குமானால், நெல்சன் மண்டேலா உலகின் மிகப்பயங்கரமான தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டு இன்னமும் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பார். அதேவேளை, மண்டேலா அண்மையில்தான் பயங்கரவாதிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனப்படுவது பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளையும் விடுதலை அமைப்புக்களின் நடவடிக்கைகளையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. நோர்வேயின் பிரதி அமைச்சரும் இலங்கையின் அமைதி முயற்சிகளின் அனுசரணையாளருமான விதார் ஹெல்கிசன் இது தொடர்பில் அருமையான ஆய்வறிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.ஆகவே, உலகின் பார்வையில் விடுதலை அமைப்புக்களும் பயங்கரவாத அமைப்புக்களாக காணப்படுகின்றன. அந்தவகையில், விடுதலைப் புலிகள் அமைப்பும் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டு பலநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களாக சித்தரிக்கப்பட்ட அமைப்புக்களுடன் அமைதிப்பேச்சுக்களை நடத்த மறுத்து பல நாடுகள் கதவடைத்துள்ளன. இந்த நடவடிக்கை விடுதலை அமைப்புக்களை அழித்தொழிக்க முயற்சித்துவரும் அரசுகளின் கைதுகளை பலப்படுத்தியுள்ளன.தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?தமிழ்மக்களுக்கு விடுதலைப் புலிகள் தொடர்ந்து பக்கபலமாக உள்ளார்கள்.பயங்கரவாதம் தொடர்பில் பேசும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய நாடுகளும் பயங்கரவாதத்துக்கு இதுவரை காலமும் ஒரு வரைவிலக்கணம் கொடுக்கவில்லையே என்று நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டதுண்டா? அந்தச் சொல்லை விளக்குவதில் அப்படி என்ன கஷ்டம் இருக்கின்றது?அப்பாவி மக்களை காயப்படுத்துவதோ கொலை செய்வதோ அல்லது அவர்களின் உடமைகளுக்குச் சேதம் விளைவிப்பதோ அவை தொடர்பான எதுவும் பயங்கரவாதமே ஆகும். அப்படியானால், எல்லா நாடுகளும் சேர்ந்து ஏன் இதனை வரைவிலக்கணமாக கொள்ளக்கூடாது.ஏனெனில், சுருக்கமாக- தெளிவாக- அர்த்தமளிக்கும் இந்த வரைவிலக்கணம் பல நாடுகளுக்கு பயங்கரவாதம் தொடர்பான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும்.
"விடுதலைப் புலிகளினதோ சிறிலங்கா அரசினதோ ஆதிக்கநிலையை இந்தியா விரும்பவில்லை."
பின்னர், அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா, ரஷ்யா, இந்தியா, நேபாளம், சீனா, பாகிஸ்தான், சிறிலங்கா, எகிப்து எனப் பல நாடுகள் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிவரும். இவை அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தை நேரடியாகவோ மறைமுகமாககவே தமது தந்திரோபாயமாக பயன்படுத்தி வருகின்றன.ஆனால், இதில் எத்தனையோ இரட்டை வேடங்கள். வானூர்தியில் குண்டுவைத்ததற்காக லிபியாவின் கடாபியை தனது காலடிக்கு கொண்டுவந்துள்ள அமெரிக்கா, முன்னர் ஈரான் வானூர்திக்கு குண்டுவைத்த தனது குற்றத்துக்கு என்ன தண்டனை வைத்திருக்கின்றது?பயங்கரவாதம் என்பது இராணுவ விடயம் அல்ல. அது அரசியல் விடயம். கொள்கையற்ற உலக அரசியல் தர்மத்தின் கீழ் அமைப்புக்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்படும். பின்னர், அதே தர்மத்தின் கீழ் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்கப்படும். அவ்வாறு நீக்கப்படாவிட்டாலும்கூட, பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கா போன்ற அரசுகளே அந்த அமைப்புக்களுடன் மறைமுகமாக பேச்சு நடத்தும். ஆயுதங்கள் வழங்கும். நிதியுதவி செய்யும்.ஈரானின் அகமட்நிஜாட் அரசை கவிழ்ப்பதற்கு 400 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ள அமெரிக்கா, தான் பயங்கரவாத அமைப்புக்களாக தடைசெய்துள்ள ஈரானிய அமைப்புக்களையே தனது இந்த திட்டத்துக்கு பயன்படுத்துவதாக நியூயோர்க்கர் பத்திரிகையில் சைமர் ஹேர்ஷ் என்பவர் அண்மையில் எழுதியுள்ளார். அமெரிக்கா கடந்த காலத்தைப் போலவே தற்போதும் ஈரானிய பயங்கரவாத அமைப்புக்களுடன்- மும்முரமாக- இணைந்து செயற்பட்டு வருகின்றது.கொள்கைகளை அரசியல் வென்று வருகின்றது.இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா காண்பிக்கும் போக்கில் தமிழ்நாட்டு அரசு செலுத்தும் செல்வாக்கு என்ன என்று கருதுகின்றீர்கள்?தமிழ்நாட்டு நிலைமை 80 களில் காணப்பட்டது போன்று இப்போது இல்லை. இந்தியாவும் தமிழ்நாடும் அந்த நிலைமையிலிருந்து மாறியுள்ளன. வன்முறை குழிக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீளமுடியாமல் துன்பப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு, காலநீட்சியால் இந்தியாவில் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் தமது வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து- முக்கியமாக மத்திய தர மக்களும் புத்திஜீவிகளும்- சுயநலமுள்ளவர்களாக மாறிவிட்டார்கள்.எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று நிலையிலேயே இன்று ஒவ்வொரு சராசரி இந்தியக் குடிமகனும் உள்ளான். இந்தியாவிலோ நேபாளத்திலோ ஏன் இந்தியாவின் பின்தங்கிய இடங்களில்கூட என்ன நடைபெறுகின்றது என்பதை அறிவதில் அவர்களுக்கு பெரிய ஆர்வமொன்றும் இல்லை.இந்தியாவின் சராசரி குடிமகன் ஒருவர் இலங்கை விடயத்தில் காண்பிக்கும் ஆர்வத்திலும் பார்க்க, மன்மோகன் சிங் அதிகம் ஆர்வம் காண்பிக்கின்றார் என்று நான் கூறுவேன்.அதற்கு ஊடகங்களும்தான் காரணம். ஏனைய நாடுகளில் காணப்படுவதைப் போலவே இந்தியாவிலும் ஊடகங்கள், நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஊடகங்கள் அற்ப விடயங்களான துடுப்பாட்டம், திரைப்படம், நட்சத்திரங்களின் வாழ்க்கை முறை போன்றவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.உண்மையான, முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டிய விடயங்களுக்கு இந்திய ஊடகங்கள் அளிக்கும் முன்னுரிமைக்கும் அவற்றுக்கு உண்மையில் எவ்வாறான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைமைக்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்படுகின்றது.ஊடகங்களைப் பொறுத்தவரை அவை தனது பயனாளர்களை திருப்திபடுத்துகின்றனவே தவிர சராசரி குடிமகனை அல்ல.இலங்கை மற்றும் அனைத்துலக நிலைமை குறித்த விடுதலைப் புலிகளின் சிந்தனை, பார்வை தற்போது என்ன என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?உங்களுக்கே தெரியும் விடுதலைப் புலிகளின் சிந்தனை என்று ஒன்றும் இல்லை. பிரபாகரனின் சிந்தனை மட்டும் தான். அதுவே விடுதலைப் புலிகளின் சிந்தனை.இன்றைய உலகில் முழுமையான ஒழுக்கத்துடனும் தனது தலைமைக்கு விசுவாசமாகவும் ஒரு விடுதலை அமைப்பு உள்ளதென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றேதான்.பிரபாகரன் திறமையான இராணுவ திட்டவகுப்பாளர் மட்டுமல்ல. அவர் அரசியலிலும் நுணுக்கமாக ஆராய்ந்து முடிவெடுக்க வல்லவர். அனைத்துலக அரசியல் பற்றிய ஆழமான அறிவு உடையவர். முக்கியமாக, மாறுகின்ற அனைத்துலகத்தின் போக்கு தமிழர்களின் போராட்டத்தை எவ்வாறு நேரடியாக பாதிக்கும் என்பதை புரிந்துகொள்வது தொடர்பில் பிரபாகரனுக்கு தீர்க்கமான ஞானம் உண்டு.இதனை நாம் முன்னரும் கூறியுள்ளேன். எண்பதுகளில் விடுதலைப் புலிகளும் ஏனைய அமைப்புக்களும் இந்தியாவின் உயர் உதவிகளைப் பெற்றுவந்தன."இப்போது நாம் இந்தியாவின் உதவியைப் பெற்றுவந்தாலும் இதே இந்தியாவை எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு காலம் எமக்கு வரும்" - என்று பிரபாகரன் என்னிடம் கூறியிருந்தார்.இந்தப் பதிலால் திகைத்துப்போன நான் "ஏன்" என்று அவரிடம் கேட்டபோது -"சுதந்திர தமிழீழம் அமைவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அப்படி அமைந்தால், அது இந்தியாவில் உள்ள தமிழ்மக்கள் பிரிந்து செல்வதை ஊக்குவிக்கும் காரணியாக அமைந்துவிடும் என்ற அச்சம் இந்திய அரசுக்கு உண்டு." என்றார்.அமெரிக்காவின் மனநிலை குறித்தும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும்.பல நாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா, இலங்கையிலும் அதனைத்தான் செய்கின்றது.பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் பெரும் அழிவுடன் கூடிய பாரிய போரை உலகளாவிய ரீதியில் புஷ் அரசு ஆரம்பித்திருந்தது. புஷ்ஷினது இந்தப் போர் உள்ளவரை தனது இலக்கை நோக்கிய பாதையில் எதையும் அடையமுடியாது என்று பிரபாகரன் உணர்ந்துகொண்டார்.புஷ்ஷினது ஆட்சி முடியும்வரை விடுதலைப் புலிகள் அமைதியாக காத்திருப்பார்கள் என்று 2001 இலேயே நான் எதிர்வு கூறியிருந்தேன். எனது கூற்றுப் பலித்திருக்கின்றது. 2009 ஜனவரியுடன் புஷ் ஆட்சி இழக்கின்றார். அடுத்து, ஒபாமா ஆட்சிக்கு வந்தால், வித்தியாசமான அமெரிக்காவையே நாம் பார்ககமுடியும்.உலகளாவிய ரீதியில்- கடந்த எட்டு வருடங்களில்- அமெரிக்கா பலமிழந்துள்ளதையும் அதன் பிரபலம் அற்றுப்போயுள்ள நிலைமையையும் நாம் தெளிவாக பார்க்கின்றோம். ஆதிக்க நிலையிலிருந்த அமெரிக்க வல்லரசின் போக்கு இனிவரும் ஆண்டுகளில் பலமிழந்து காணப்படும்.வர்த்தக நெருக்கடிகள், ஆப்கானிலும் ஈராக்கிலும் மேற்கொண்ட குழப்பான போர் நடவடிக்கை, மனதளவில் சோர்ந்துபோயுள்ள நாட்டுமக்கள் போன்ற விடயங்களினால் அமெரிக்கா பெரிய சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றது. அத்துடன், மீண்டும் எழுச்சி கொள்ளும் ரஷ்யா, புத்தெழுச்சி கொள்ளும் சீனா, இந்தியா, பிறேசில் ஆகியவையும் அமெரிக்காவுக்குப் பெரும் சவால்களாக அமைந்துள்ளன.21 ஆம் நூற்றாண்டில் வித்தியாசமான உலகத்தை பார்க்கப்போகின்றோம் என்பதையே இவை கோடி காட்டுகின்றன.இந்த உலக அரசியல் மாற்றங்களை மதிப்பீடு செய்து, அடுத்த ஆண்டுதான் பிரபாகரன் தனது நகர்வினை மேற்கொள்வார் என்று நான் நினைக்கிறேன்.தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பான செய்திகளை தவிர்க்கம் மேற்குலக ஊடகங்கள் குறித்து அவற்றுடன் இணைந்து பல காலம் பணியாற்றி வருபவர் என்ற ரீதியில்- நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?மேற்குலக ஊடகங்கள்- முக்கியமாக அமெரிக்க மற்றும் பிரித்தானியா- தமது அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக கருதும் செய்திகளையே கவனத்தில் கொள்கின்றன. அதுதான், அவர்கள் ஆப்கான் மற்றும் ஈராக் குறித்த செய்திகளை கவனிக்கின்றார்கள்.இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினை என்பது மேற்குலக ஊடகங்கள் சார்ந்த அரசுகளுக்கு முக்கியமான விடயம் அல்ல.அங்குள்ள ஊடகங்கள் அரச அமைப்பின் ஒரு பகுதியே ஆகும். ஆகவே, அதில் அவர்கள் பிழை விடமாட்டார்கள். அதற்காக அங்கு ஊடக சுதந்திரம் இல்லை என்று கூறமாட்டேன். ஏனைய நாடுகளை விட அங்கு அதிக ஊடக சுதந்திரம் உள்ளது.
"பயங்கரவாதம் என்பது இராணுவ விடயம் அல்ல. அது அரசியல் விடயம்."
ஆகவே, வெளிவிவகார கொள்கைகள் மற்றும் இராணுவ- அரசியல் விவகாரங்கள் என்று வரும்போது அந்த நாட்டு அரசுகளுடன் இந்த ஊடகங்கள் மிக நெருக்கமாகவே செயற்படுகின்றன.அந்த நாட்டு அரசுகளும் தமது போர் மற்றும் வெளிவிவகார இலக்குகளை அடைவதற்கு இந்த ஊடகங்களை மறைமுகமான கருவியாக பயன்படுத்திக்கொள்கின்றன.ஈராக் போரின் ஆரம்பத்தில் அதனை மேற்குலக ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பது இதற்கு நல்ல உதாரணம். புஷ்ஷினது பிரசாரத்தை அப்படியே விழுங்கிவிட்டு வாந்தி எடுத்தது போலவே அப்போது மேற்குலக ஊடகங்கள் செயற்பட்டன.இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள அடக்குமுறை குறித்து ஊடகவியலாளர் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன?வளர்ச்சியடைந்த சமூகங்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை பார்த்துக்கொண்டு பொறுமை காக்கவே கூடாது. நாட்டின் குடிமக்கள் இந்த தாக்குதல்களுக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும்.அத்துடன் பாதிக்கப்பட்ட இந்த ஊடக அமைப்புக்கள், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் எல்லைகள் தாண்டிய ஊடக இயக்கம் மற்றும் அமைப்புக்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு தமது முறைப்பாடுகளை பதிவுசெய்ய வேண்டும். அப்போதுதான், இந்த அமைப்புக்கள் அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கமுடியும்.ஊடகவியலாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் குழுக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஊடகவியலாளர்களை பாதுகாப்பது வளர்ச்சியடைந்த நாடு ஒன்றின் அடிப்படை கடமை.அதேவேளை, அரசியலில் தலையிடாமல் தனது பணியைச் செய்வது ஊடகவியலாளரின் அடிப்படைக் கடமை. இப்போதெல்லாம், ஊடகவியலாளர்கள் கட்சிகளின் பேச்சாளர்களாக செயற்படும் நிலைமை அதிகரித்துவிட்டது. கட்சி அங்கத்தவராக இருந்துகொண்டு தான் செய்யவந்த பணியைச் செவ்வனே செய்யமுடியாது. இப்படியான ஊடகவியலாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும்- பொய்களையும்- அவிழ்த்து விடுகின்றனர். கட்சி சாராமல் உண்மையாக, நேர்மையாக செயற்படுவது ஊடகவியலாளனின் அடிப்படை கடமை.நீங்கள் மீண்டும் இலங்கை செல்லவுள்ளீர்களா? இல்லை என்றால் ஏன்?இல்லை. நான் அங்கு செல்வதாக இல்லை. நான் உங்களுக்கு முன்னர் கூறியது போன்று ஊடகங்களுக்கு இலங்கையில் நாட்டம் இல்லை.ஆனால், என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.எனது வாழ்க்கையில் நிறைவேறாமல் உள்ள சில கனவுகளில் அதுவும் ஒன்று.எமது காலப்பகுதியில் உள்ளதொரு மிக முக்கியமான கெரில்லாத் தலைவர் பிரபாகரன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.அவரது மனதை எந்த எழுத்தாளரையும்- ஊடகவியலாளரையும்- விட நான் அதிகம் புரிந்துகொள்வேன் என நினைக்கிறேன்.பிரபாகரனின் வாழ்கை வரலாறை தமிழ்மக்கள் மட்டுமல்லாமல் முழு உலகமும் ஆழமாக புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் அவர்களை ஈர்க்கும் வகையிலும் நான் எழுதுவேன்.